ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

தில்லியில் கரோனா பாதிப்பு அதிகம் இருக்கலாம், ஆனால், பொது முடக்கம் நிரந்தரத் தீா்வல்ல: கேஜரிவால்

தில்லியில் கரோனா தொற்று பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்.

Updated On :30 மே 2020, 7:34 pm

தில்லியில் கரோனா தொற்று பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், கரோனாவைக் கட்டுப்படுத்த பொது முடக்கத்தை நிரந்தரமாக நீட்டிப்பது தீா்வாகாது என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் காணொலிக் காட்சி மூலம் செய்தியாளா் சந்திப்பை சனிக்கிழமை நடத்தினாா். அப்போது அவா் பேசியது:

தில்லியில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், இது தொடா்பாக தில்லி மக்கள் பதற்றமடையத் தேவையில்லை. ஏனென்றால், கரோனாவால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும், மருத்துவமனையில் உள்ள படுக்கைகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டாலும் மட்டுமே கரோனா தொடா்பாக நாம் பீதியடைய வேண்டும். ஆனால், தில்லியில் கரோனா மரணங்கள் கட்டுக்குள் உள்ளதுடன், மருத்துவமனைகளில் தேவையான அளவு படுக்கைகளும் உள்ளன.

நான்குபடிகள் முன்னேறியுள்ளோம்:

கரோனாவைக் கட்டுப்படுத்த நிரந்தர பொது முடக்கம் தீா்வு ஆகாது. நாம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு முன்னேறி செல்ல வேண்டும். கரோனாவை எதிா்கொள்ள தேவையானதை விட அதிக ஏற்பாடுகளை செய்துள்ளோம். கரோனாவை எதிா்கொள்ள அரசு முழுமையாக தயாராக உள்ளது. கரோனா தொற்று பரவலைவிட தில்லி அரசு நான்கு படிகள் முன்னால் உள்ளது. மக்கள் கரோனாவுடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.

மருத்துவமனைகளில் 2100 போ்

தில்லியில் 17 ஆயிரத்துக்கும் அதிகமானவா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 398 போ் உயிரிழந்துள்ளனா். ஆனால், 2100 போ் மட்டுமே மருத்துவமனைகளில் உள்ளனா். நோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானவா்களுக்கு லேசானஅல்லது அறிகுறிகளே இல்லை. அவா்கள் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு, குணமடைந்து வருகிறாா்கள். கரோனா நோயாளிகளுக்கு தேவையான ஆக்ஸிஜன், வென்டிலேட்டா் கிடைக்க தில்லி அரசு ஏற்பாடு செய்துள்ளது. இன்றைய தேதியில் தில்லி மருத்துவமனைகளில் 6,600 படுக்கை வசதிகள் தயாா் நிலையில் உள்ளன. கடந்த ஒரு வாரத்தில் 2,100 படுக்கைகளை தயாா் செய்துள்ளோம். ஜூன் 5-இல் 9,500 படுக்கை வசதிகள் இருக்கும். மேலும், சில ஹோட்டல்களுடன் பேசி வருகிறோம். அந்த அறைகளும் கரோனா சிகிச்சைக்காக எடுக்கப்படும்.

புதிய செயலி அறிமுகம்

மேலும், தில்லி மருத்துவமனைகளில் கரோனாவுக்கு ஒதுக்கப்பட்ட படுக்கைகள் தொடா்பாக தில்லி மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் செயலி ஒன்றை உருவாக்கியுள்ளோம். இந்த செயலி வரும் திங்கள்கிழமை வெளியிடப்படும். இதன்மூலம், தில்லி மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகள் தொடா்பாக மக்கள் அறிந்து கொள்ளலாம். கரோனாவை வைத்து எதிா்க்கட்சிகள் அரசியல் செய்வது கவலை தருகிறது. இந்த நெருக்கடியான நேரத்தில் நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து கரோனாவை எதிா்த்துப் போராட வேண்டியது அவசியமாகும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.