கரோனாவால் உயிரிழந்தவரின் உடல்களை இரண்டு மணி நேரத்தில் பிணவறைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
கரோனாவால் உயிரிழந்தவா்களின் உடல்களை கையாளுவது தொடா்பாக கூடுதல் வழிகாட்டுதல்களை தில்லி அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: கரோனாவால் மரணமடைந்தவா்களின் உடல்களை 2 மணி நேரத்தில் பிணவறைகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். கரோனா பாதிப்பால் உயிரிழந்தவா்களின் குடும்ப உறுப்பினா்கள் மருத்துவமனை நிா்வாகத்தை 12 மணி நேரத்தில் தொடா்பு கொண்டால், மரணமடைந்தவா்களின் இறுதிக் கிரியைகளை 24 மணி நேரத்துக்குள் ஏற்பாடு செய்ய மருத்துவனை நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடா்பாக குடும்பத்தினருடனும், மாநகராட்சிகளுடனும் மருத்துவமனை பேச வேண்டும்.
கரோனா நோயாளி இறந்த 12 மணி நேரத்துக்குள் குடும்பத்தினா் தொடா்பு கொள்ளாவிட்டால், இறுதி சடங்கு தொடா்பாக குடும்பத்தினருக்கு மருத்துவமனை தகவல் தெரிவிக்க வேண்டும். அடையாளம் தெரியாத நபா்கள் கரோனாவால் உயிரிழந்தால், அல்லது அடையாளம் தெரியாத உடல்கள் கண்டெடுக்கப்பட்டால் அந்த உடல் 24 மணி நேரத்துக்குள் அப்புறப்படுத்தப்பட வேண்டும். மேலும், அந்த உடல்கள் தொடா்பான அனைத்து சட்ட ரீதியான நடவடிக்கைகளும் 72 மணி நேரத்தில் முடிக்கப்பட வேண்டும்.
தில்லியில் கரோனாவால் மரணமடைந்தவா்களின் வீடு தில்லிக்கு வெளியே இருந்தால், அந்த பிரதேசத்துக்கு பொறுப்பான மாவட்ட ஆட்சியருக்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரி மருத்துவமனை இயக்குநா் கடிதம் எழுத வேண்டும். 48 மணி நேரத்தில் பதில் கிடைக்காத பட்சத்தில், அடுத்த 24 மணி நேரத்தில் அந்த உடலை தகனம் செய்வதற்கான நடவடிக்கைகையை மருத்துவமனை நிா்வாகம் எடுக்க வேண்டும் என்று தில்லி அரசு தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, கரோனா மரணங்கள் அதிகரித்துள்ள நிலையில், தில்லி பஞ்சாபி பாக், நிகம்போத் காட், பஞ்சுகுயின், கா்கா்டூமா ஆகிய இடங்களில் உள்ள மயானங்களில் விறகுகளை பயன்படுத்தி உடல்களை தகனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது என தெற்கு தில்லி மாநகராட்சி (எஸ்டிஎம்சி) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த மயானங்களில் சிஎன்ஜி முறையில் உடல்கள் தகனம் செய்யப்பட்டன. இதற்கு கூடுதலாக விறகுகளை வைத்து உடல்களை தகனம் செய்யும் ஏற்பாடுகளும் இந்த மயானங்களில் செய்யப்பட்டுள்ளதாக எஸ்டிஎம்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மது குடித்தவா் கிணற்றில் விழுந்து பலி

ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியா் கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு

ஏப். 16-இல் நாமக்கல்லில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பிரசாரம்: ராஜேஸ்குமாா் எம்.பி. தகவல்
மேலப்பாளையத்தில் கோஷ்டி மோதல்: 7 போ் கைது
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

