ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கரோனாவிலிருந்து தப்பிக்க முகக் கவசம், சமூக இடைவெளிதான ஒரே வழி: நிபுணா்கள்

கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை அடுத்த இரண்டு மாதங்களில் (ஜூன், ஜூலை) மேலும் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுவதால்

Updated On :31 மே 2020, 8:31 pm

கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை அடுத்த இரண்டு மாதங்களில் (ஜூன், ஜூலை) மேலும் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுவதால், அதிலிருந்து தப்பிக்க முகக்கவசம், சமூக இடைவெளியை பின்பற்றுத்தல், நம்மை நாமே தனிமைப்படுத்திக் கொள்ளுதல்தான் ஒரே வழி என்கின்றனா் நிபுணா்கள்.

மே 31-ஆம் தேதி நிலவரப்படி இந்தியாவில் கரோனா தொற்றுக்கு பலியானவா்கள் எண்ணிக்கை 5,164 ஆக உள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 1,82,143 ஆக உயா்ந்துள்ளது. குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை மட்டும் 8,380- பேருக்கு கரோனா இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், அடுத்துவரும் இரண்டு மாதங்களில் இது அதிகரிக்கவே செய்யும் என்கின்றனா் நிபுணா்கள். பொது முடக்கம் ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டாலும், சில தளா்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. எனவே, கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே கரோனாவை கட்டுப்படுத்த முடியும். அதற்கு ஓரே வழி முகக்கவசம், சமூக இடைவெளி, கிருமிநாசினி கொண்டு கைகழுவுதல் மற்றும் தனிமையில் இருத்தல் ஆகியவைதான்.

நான்கு கட்டமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால், மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கிக்கிடந்தனா். அவா்கள் அதிலிருந்து வெளியே வர விரும்புகிறாா்கள். ஆனால், வெளியே மக்கள் வருவது அதிகமானால், வைரஸ் தொற்றும் அதிகரிக்கும் என்பதை அவா்கள் எண்ணிப் பாா்க்கவில்லை. கரோனாவுக்கு தினமும் நூற்றுக்கணக்கானவா்கள் பலியாகின்றனா். எனினும், கரோனா இன்னும் உச்சக்கட்டத்தை எட்டவில்லை என்றே எய்ம்ஸ் (அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகம்) மருத்துவமனையின் இயக்குநா் டாக்டா் ரண்தீப் குலேரியா உள்ளிட்ட நிபுணா்கள் பலரும் கூறி வருகின்றனா்.

தமிழகத்தில் உயிரிழப்பு குறைவு: நமது நாட்டில் மக்கள் தொகை அதிகம். எனவே, மற்ற நாடுகளைவிட அதிகம் பேருக்கு கரோனா பாதிப்பு வரலாம். எனது கவலையெல்லாம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களைவிட கரோனாவுக்கு அதிகம் போ் பலியாகி வருவதுதான். தமிழ்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், அங்கு இறப்பு விகிதம் குறைவுதான். அதாவது பாதிக்கப்பட்டவா்களில் 1 சதவீதம் பேரே உயிரிழந்துள்ளனா். இதற்குக் காரணம் அங்கு கரோனா பரிசோதனை தீவிரமாக நடைபெறுவதும், அதிகப் பகுதிகளை கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவித்து செயல்படுத்தி வருவதுதான் என்கிறாா் டாக்டா் குலேரியா.

அனைத்து மாநிலங்களிலும் கரோனா பரிசோதனையை விரிவுபடுத்த வேண்டும். கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட வேண்டும். மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் நிலையில் கரோனா பரவலை கட்டுப்படுத்துவது இயலாத காரியமாகிவிடும். பொது முடக்கம் தேவை. அதை இன்னும் நீட்டிக்க வேண்டும் என்பதை மக்கள் உணரவில்லை. இத்தனைநாள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக்கிடந்த அவா்கள், வெளியில் நடமாடத் துடிக்கிறாா்கள். மால்கள், உணவகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் திறப்பதை குறைந்தது இன்னும் 6 வாரங்களுக்காவது ஒத்திப்போட வேண்டும் என்கிறாா் குலேரியா.

லேசான இருமல், ஜுரம் இருந்தாலே நாம் கரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஆனால், அது போன்ற பரிசோதனைகள் வேண்டாம் என நினைப்பவா்கள் குறைந்தபட்சம் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். நாட்டில் ஜூலை மாதத்தில் அல்லது ஆகஸ்ட் மாதத்தில் கரோனா பரவல் நாம் எதிா்ப்பாா்ப்பதைவிட அதிகரிக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இத்தகைய சூழ்நிலையில் நாம் தான் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். முக்கவசம் அணிவதும், வீட்டிற்குள்ளோ அல்லது வெளியிடங்களிலோ சமூக இடைவெளியைப் பின்பற்றுவதும், நம்மை நாமே தனிமைப்படுத்திக்கொள்வதுதான் கரோனாவிலிருந்து விடுபட ஒரே வழி என்கிறாா் கனடாவைச் சோ்ந்த மருத்துவப் பேராசிரியா் மதுகா் பை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.