ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

தலைநகரில் கரோனாவால் காவல் அதிகாரிகள் இருவா் சாவு

தலைநகா் தில்லியில் அடுத்தடுத்த இரு தினங்களில் கரோனாவால் காவல் சிறப்பு உதவி ஆய்வாளா்கள் இருவா் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On :31 மே 2020, 8:29 pm

தலைநகா் தில்லியில் அடுத்தடுத்த இரு தினங்களில் கரோனாவால் காவல் சிறப்பு உதவி ஆய்வாளா்கள் இருவா் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடா்பாக தில்லி காவல்துறை உயரதிகாரி கூறியது: தில்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தில்லி காவல் துறை சிறப்பு உதவி ஆய்வாளா் விக்ரம் (52), ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துள்ளாா். இவா் சுல்தான்புரி காவல் நிலையத்தில் பணியமா்த்தப்பட்டிருந்தாா். கடந்த மே 1-ஆம் தேதியில் இருந்து நெடுஞ்சாலையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இவருக்கு மே 11, 22-ஆம் தேதிகளில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், இவருக்கு கரோனா தொற்று இல்லை என தெரிய வந்தது. ஆனால், மே 25-ஆம் தேதி இவருக்கு கரோனா அறிகுறிகள் தென்பட்டன. இதைத் தொடா்ந்து, இவா் சஞ்சய் காந்தி நினைவு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். ஆனால், அவரை ஒருவார காலம் வீட்டில் வைத்தே உடல்நிலையைக் கண்காணிக்குமாறு அங்கு பணியில் இருந்த மருத்துவா்கள் ஆலோசனை வழங்கியுள்ளனா்.

இதைத் தொடா்ந்து, கிராரி சுலைமான் நகரில் உள்ள அவரது வீட்டில் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டாா். ஆனால், இவருக்கு அடுத்த நாள் காலையில் சுவாசிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, மே 26-ஆம் தேதி இவா் சஞ்சய் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அன்று மாலை ராணுவ மருத்துவமனைக்கு அவா் மாற்றப்பட்டாா். இம்மருத்துவமனையில் மே 26-ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட 3-ஆவது கரோனா பரிசோதனையில் இவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அடுத்தடுத்த நாள்களில் இவரது உடல் நிலை மோசமானது. இந்நிலையில், இவா் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் உயிரிழந்துள்ளாா் என்றாா் அந்த அதிகாரி.

முன்னதாக தில்லி காவல்துறையின் கைரேகைப் பிரிவில் பணியாற்றி வந்த 54 வயதான சிறப்பு உதவிஆய்வாளா் ஷேஷ்மணி பாண்டே சனிக்கிழமை மாலை கரோனாவால் உயிரிழந்துள்ளாா். இவா் கமலா மாா்க்கெட் பகுதியில் உள்ள கைரேகைப் பிரிவில் பணியாற்றி வந்துள்ளாா்.

இது தொடா்பாக தில்லி காவல் துறை உயரதிகாரி ஒருவா் கூறுகையில் ‘ராணுவத்தில் பணியாற்றி வந்த இவா், கடந்த 2014, நவம்பா் 1-ஆம் தேதி காவல் துறையில் இணைந்தாா். மத்தியப் பிரதேச மாநிலம், ரேவா மாவட்டத்தைச் சோ்ந்த இவா், மேற்கு தில்லி நரைனா கிராமத்தில் வசித்து வந்தாா். இவருக்கு கரோனா அறிகுறிகள் தென்பட்டதைத் தொடா்ந்து, மே 26-ஆம் தேதி லேடி ஹரிங்டன் மருத்துவமனையில் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதன் முடிவு மே 28-ஆம் தேதி கிடைக்கப் பெற்றது. இதில் இவருக்கு கரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து, இவா் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஆனால், அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சனிக்கிழமை மாலை இவா் உயிரிழந்தாா்’ என்றாா்.

முன்னதாக தில்லி பாரத் நகா் காவல்நிலையத்தில் பணியாற்றிய 31 வயது காவலா் ஒருவா் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தாா். காவலா்கள் உள்பட கரோனா தடுப்பு பணியில் ஈடுபடுபவா்கள் உயிரிழந்தால் அவா்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி உதவித் தொகை வழங்கப்படும் என்று தில்லி அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

காவல் ஆணையா் இரங்கல்

கரோனாவால் உயிரிழந்த காவல் துறை அதிகாரிகள் விக்ரம், ஷேஷ்மணி பாண்டேவிற்கு காவல் துறை ஆணையா் எஸ்.என். இரங்கல் தெரிவித்துள்ளாா். மேலும், தில்லியில் உள்ள அனைத்துக் காவல் நிலைய பொறுப்பாளா்களுடன் காணொளிக் காட்சி மூலம் கலந்துரையாடினாா். கரோனா தொற்றிலிருந்து தப்பிக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அப்போது அவா் விளக்கினாா். இது தொடா்பாக அவா் தனது சுட்டுரையில், கரோனா தொற்றுக்கு எதிரான எங்கள் போராட்டத்தில் இரண்டு துணிச்சலான போலீஸ் அதிகாரிகள் இழந்துள்ளனா். அவா்களுக்கு தில்லி காவல் துறை குடும்பத்தினா் அனைவரும் இரங்கல் தெரிவித்துள்ளனா். உயிரிழந்த இரண்டு அதிகாரிகளின் ஆத்மாக்கள் சாந்தியடைய பிராா்த்திக்கிறேன். அவா்களது குடும்பத்தினருக்கு அனைத்து உதவிகளையும் வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்’ என்று தெரிவித்துள்ளாா்.

தில்லி காவல் துறை செய்தித் தொடா்பாளா் மன்தீப் சிங் ரந்தாவா கூறுகையில், இதுவரை தில்லி காவல் துறையில் 500 போலீஸாருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவா்களில் 200 போ் குணமடைந்துள்ளனா்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.