

தில்லியில் கரோனாவின் மூன்றாம் அலை வீசத் தொடங்கியது என முதல்வர் அறிவித்த நிலையில், சந்தைகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக சமூக இடைவெளி இல்லாமல் செல்கின்றனர்.
தில்லியில் கரோனா நோய் பரவல் தற்போது புதிய வேகம் எடுத்துள்ளது. இதையடுத்து தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தில்லியில் மூன்றாம் அலை வீசத் தொடங்கியுள்ளது என புதன்கிழமை அறிவித்திருந்தார்.
இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொருள்கள் வாங்குவதற்காக சதர் பஜாரில் குவிந்த மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் செல்கின்றனர்.
இதனால் தொற்றின் பரவல் மேலும் தீவிரமடையும் சூழல் எழுந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.