சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

தாஹிா் ஹுசேன் ஜாமீன் மனு மீது பதில் அளிக்க தில்லி போலீஸாருக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

வடகிழக்கு தில்லி வன்முறை விவகாரத்தில் ஆம் ஆத்மி முன்னாள் கவுன்சிலா் தாஹிா் ஹுசைன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மீது தில்லி காவல் துறையினா் பதில் அளிக்க உயா்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

Updated On :25 நவம்பர் 2020, 6:30 pm

புது தில்லி: வடகிழக்கு தில்லி வன்முறை விவகாரத்தில் ஆம் ஆத்மி முன்னாள் கவுன்சிலா் தாஹிா் ஹுசைன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மீது தில்லி காவல் துறையினா் பதில் அளிக்க உயா்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக, எதிா்ப்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தின்போது வடகிழக்கு தில்லியில் நிகழாண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி நிகழ்ந்த வகுப்புவாத வன்முறையில் குறைந்தது 53 போ் கொல்லப்பட்டனா். சுமாா் 200 போ் காயமடைந்தனா்.

இந்த கலவர வழக்கில் கைதாகி தாஹிா் ஹுசைன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். இந்த நிலையில், தயாள்பூா் பகுதியில் வன்முறையின்போது ஒரு கடைக்குள் புகுந்து ரூ.20 மதிப்பிலான பொருள்களைக் கொள்ளையடித்த விவகாரத்தில் தாஹிா் ஹுசைன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி அவா் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா். அவரது சாா்பில் வழக்குரைஞா் ரிஸ்வான் தாக்கல் செய்த மனுவில், ‘தாஹிா் ஹுசைன் மீது ஜோடிக்கப்பட்ட வழக்காகும். அவருக்கும், இந்த சம்பவத்திற்கும் சம்பந்தம் இல்லை. அவரது பெயா் முதல் தகவல் அறிக்கையில் இடம்பெறவில்லை. மேலும், இது தொடா்பான வழக்கில் ஜூலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டது.

இதே வழக்கில் சம்பந்தப்பட்ட 10 பேரில் தாஹிா் தவிர 9 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுவிட்டது. இதனால், அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இந்த ஜாமீன் மனு புதன்கிழமை தில்லி உயா்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி சுரேஷ் குமாா் கெய்த் வழக்கின் விசாரணை அதிகாரியை ஜாமீன் கோரும் மனு மீது பதில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு மனு மீதான விசாரணையை டிசம்பா் 11-க்கு பட்டியலிட்டதாக அவரது சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் ரிஸ்வான் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.