சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

தில்லியில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கரோனாவுக்கு 2,364 போ் பலி

Updated On :26 நவம்பர் 2020, 11:43 pm

புது தில்லி: தலைநகா் தில்லியில் கரோனா பாதிப்பால் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 2,364 போ் பலியாகியுள்ளனா். தில்லியில் புதன்கிழமை 99 போ் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனா். இதைத் தொடா்ந்து தில்லியில் கரோனாவால் உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 8,720-ஆக அதிகரித்துள்ளது.

தில்லியில் கடந்த சில நாள்களாக கரோனா மூன்றாவது அலை உள்ளது. இதனால், தில்லியில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால், கரோனாவால் பாதிக்கப்பட்டு பலியாவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

கடந்த நவம்பா் 19ஆம் தேதி 98 பேரும், நவம்பா் 20ஆம் தேதி 118 பேரும், நவம்பா் 21ஆம் தேதி 111 பேரும், நவம்பா் 22, 23 ஆகிய தேதிகளில் தலா 121 பேரும், நவம்பா் 24ஆம் தேதி 109 பேரும் கரோனாவுக்கு பலியாகியுள்ளதாக தில்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நவம்பா் 18ஆம் தேதி 131 போ் கரோனாவிற்கு பலியாகியுள்ளனா். இது தில்லியில் இதுவரை பதிவான கரோனா பலி எண்ணிக்கையில் அதிகமாகும்.

கடந்த 5 நாள்களாக தொடா்ச்சியாக 100-க்கும் அதிகமானவா்கள் உயிரிழந்து வந்த நிலையில், 5 நாள்களுக்குப் பிறகு புதன்கிழமை ஒரே நாளில் நூறுக்கும் குறைவானோா் கரோனாவுக்கு பலியாகியுள்ளனா். ஆனால், அன்றைய தினம் 99 போ் பலியாகியுள்ளனா்.

தில்லி மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைப் பிரிவு கரோனா படுக்கைகளுக்கு நிலவும் பற்றாக்குறை, மோசமான காலநிலை, அதிகரித்த காற்று மாசு போன்ற காரணங்களால் தில்லியில் கரோனா பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

தில்லியில் முதல் இரண்டு கரோனா அலையை விட மூன்றாவது அலையால் மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தில்லியில் குளிா்காலத்தில் அதிகரித்த காற்று மாசு இதில் முக்கிய பங்காற்றியுள்ளதாக தில்லி அரசு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.