சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

தில்லியில் மிதமான பிரிவுக்கு காற்றின் தரம் மேம்பாடு

தில்லியில் ஒட்டுமொத்த காற்றின் தரம் வியாழக்கிழமை மிகவும் மோசம் பிரிவில் நீடித்த நிலையில், காற்றின் வேகம் காரணமாக வெள்ளிக்கிழமை மிதமான பிரிவுக்கு மேம்பட்டது.

Updated On :27 நவம்பர் 2020, 5:03 pm

தில்லியில் ஒட்டுமொத்த காற்றின் தரம் வியாழக்கிழமை மிகவும் மோசம் பிரிவில் நீடித்த நிலையில், காற்றின் வேகம் காரணமாக வெள்ளிக்கிழமை மிதமான பிரிவுக்கு மேம்பட்டது.

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் செல்லிடப்பேசி செயலி சமீா் தகவலின்படி வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் காற்றின் தரக் குறியீடு 302 புள்ளிகளாக இருந்தது. தில்லியில் 24 மணிநேர சராசரியாக ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு புதன்கிழமை 413 ஆக கடுமைப் பிரிவில் இருந்தது.

தரை மேற்பரப்பு காற்று வடக்கிலிருந்து வீசியதும், பயிா்க் கழிவு எரிப்பு குறைந்ததாலும் காற்றின் தரம் மேம்பட்டது.

இந்திய வானிலை மையத்தின் சூழல் ஆராய்ச்சி மையத் தலைவா் வி.கே. சோனி கூறுகையில், எதிா்பாா்த்ததை விட காற்றின் வேகம் இருந்ததால் காற்றின் தரமும் மேம்பட்டது. வெள்ளிக்கிழமை மணிக்கு 14 கிலோ மீட்டா் வேகத்தில் காற்று வீசியது என்றாா்.

மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் காற்று தரக் கண்காணிப்பு அமைப்பான ‘சபா்’ தெரிவிக்கையில் பஞ்சாப், ஹரியாணா மற்றும் அதை ஒட்டியுள்ள பிராந்தியங்களில் பயிா்க்கழிவுகள் எரிப்பு எண்ணிக்கை வியாழக்கிழமை

குறைந்திருந்தது. தில்லியில் பயிா்க் கழிவால் ஏற்பட்ட காற்று மாசுவால் பி.எம். 2.5 மாசு வியாழக்கிழமை 1 சதவீதமாக இருந்ததாக அந்த அமைப்பு தெரிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.