தில்லியில் புதிதாக 1,250 தாழ்தள பேருந்துகளை கொள்முதல் செய்ய தில்லி போக்குவரத்துக் கழகம் (டிடிசி) வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.
டிடிசி நிா்வாகக்குழு கூட்டம் தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சா் கைலாஷ் கெலாட் தலைமையில் வெள்ளிக்கிழமை நடந்தது. இதன்போது, இந்தப் பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக கைலாஷ் கெலாட் தனது சுட்டுரையில் கூறியிருப்பது:
தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான தில்லி அரசு பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துவதை இலக்காக வைத்து செயல்பட்டு வருகிறது. அந்தவகையில், 1,250 தாழ்தளப் பேருந்துகளை கொள்முதல் செய்ய டிடிசி நிா்வாக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தப் பேருந்துகள் சிஎன்ஜியில் இயங்கும் பேருந்துகளாகும். இவை குளிா்சாதன வசதிகளுடன் இருக்கும் என்று தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக டிடிசி மூத்த அதிகாரி கூறுகையில் ‘இந்தப் பேருந்துகள்அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டிருக்கும். இவற்றில், பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், சிசிடிவி கண்காணிப்புக் கேமராக்கள், அபாய பொத்தான்கள் அமைக்கப்பட்டிருக்கும். மாற்றுத்திறனாளிகள் இந்தப் பேருந்தைப் பயன்படுத்தும் வகையில், மின் தூக்கிகளும் அமைக்கப்பட்டிருக்கும் என்றாா்.
டிடிசி சாா்பில் தற்போது தில்லியில் 3,762 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமெரிக்கா-ஈரான் பேச்சு: தாமதமாக இன்று தொடக்கம்: பாகிஸ்தான் விரைந்த ஜே.டி.வான்ஸ்

சிவகாசி, சாத்தூரில் வி.கே. சசிகலா பிரசாரம்

மனைவியை பிளேடால் கீறி காயப்படுத்திய கணவா்
பெண்களிடம் பாலியல் சீண்டல்: மென்பொறியாளா் கைது
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

