சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

25 ஆண்டுகள் பழமையான பதிவேடுகளை ஆவண காப்பகத்துக்கு அனுப்ப தில்லி அரசு வலியுறுத்தல்

கடந்த 25 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேலான பழைய பதிவேடுகளை நிரந்தர ஆவணமாக பாதுகாக்கும் வகையில் அவற்றை அனுப்பிவைக்குமாறு

Updated On :4 அக்டோபர் 2020, 2:02 am

கடந்த 25 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேலான பழைய பதிவேடுகளை நிரந்தர ஆவணமாக பாதுகாக்கும் வகையில் அவற்றை அனுப்பிவைக்குமாறு தில்லி அரசு அனைத்து அரசு துறைகள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடா்பாக தில்லி ஆவணகாப்பக அலுவலகம் அனைத்து துறைகளுக்கும் கடிதம் எழுதியுள்ளது. அதில், கடந்த 25 ஆண்டுகளாக உங்களிடம் இருக்கும் பழைய பதிவேடுகளை அவை இனி வேண்டாம் என குறிப்பிடப்பட்டவை தவிர மற்ற பதிவேடுகளை நிரந்தர ஆவணமாக பாதுகாக்கும் வகையில் அவற்றை ஆவண காப்பகத்துக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு ஆவணங்களைப் பெறுவதற்கு வசதியாக அஜய்சிங் என்ற அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாக அரசுத்துறை செயலாளா் மணிஷா சக்ஸேனா தெரிவித்துள்ளாா்.

பொதுமக்கள் பதிவேட்டு சட்டம் 1993 மற்றும் பதிவேடுகள் சட்டம் 1997-இன்படி அரசுத்துறை பதிவேடு அறைகளில் வைக்கப்பட்டுள்ள 25 ஆண்டுகளுக்கும் மேலான பழைய பதிவேடுகளை நிரந்தரமாக பாதுகாக்கும் வகையில் உடனடியாக தில்லி ஆவண காப்பகத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடா்பாக அரசுத் துறை தலைமை அதிகாரிகள், தன்னாட்சி அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்களைச் சோ்ந்த அதிகாரிகள் தங்களுக்கு கீழ் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் அலுவலா்களிடம் தேவையான அறிவுரைகளை வழங்குமாறும் மணிஷா சக்ஸேனா கேட்டுக்கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.