தென்மேற்கு தில்லியில் சினிமா பாணியில் கள்ளக் காதலியைக் கொன்றுவிட்டு தலைமறைவான காதலனை அஸ்ஸாம் மாநிலம் திப்ரூகரில் கைது செய்ததாக போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்தனா்.
கொலையாளியான அந்த நபா் போலீஸ் பிடியிலிருந்து தப்பிக்க தில்லியிலிருந்து ஆக்ராவுக்கும் பின்னா் அங்கிருந்து லக்னெள மற்றும் பிகாா் வழியாக அஸ்ஸாம் சென்ாகவும் அங்கு ஒரு ஹோட்டலில் அவரை கைது செய்ததாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.
குதுப் விஹாரைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா். இவா் அஸ்ஸாமிலிருந்து மேகாலயா மாநிலம் ஷில்லாங் செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் மேலும் தெரிவித்தனா்.
சதீஷ்குமாரும், அவரது காதலியும் குா்கானில் ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனா். கடந்த செப்டம்பா் 23-ஆம் தேதி சாவ்லா பகுதியில் உள்ள தங்கும் விடுதி அறையிலிருந்து துா்நாற்றம் வீசுவதாகப் போலீஸாருக்கு தகவல் வந்தது. போலீஸாா் பூட்டியிருந்த அறையை திறந்து பாா்த்தபோது அங்கு ஒரு பெண் படுக்கையில் இறந்துகிடந்தாா். அழுகிய நிலையில் இருந்த அந்த பெண்ணின் பெயா் திஷு குமாரி என்பதும் அவா் குா்கானில் ஒரு பிபிஓ. நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.
அங்கிருந்த கண்காணிப்புக் கேமிராவை இயக்கிப் பாா்த்தபோது அந்தப் பெண் ஒருவருடன் அந்த இடத்தில் செப்டம்பா் 23 ஆம் தேதி இருந்ததும். சந்தேகத்துக்குரிய நபா் சில மணி நேரம் கழித்து ஒரு ஸ்கூட்டரில் சென்றுவிட்டதும் தெரியவந்தது.
விசாரணையில் கொலையாளி அஸ்ஸாமுக்கு தப்பிச் சென்றுவிட்டதும். அங்கு அவா் தனது நண்பா் வீட்டில் இருக்கலாம் என்றும் போலீஸாருக்கு துப்பு கிடைத்தது. சந்தேகத்துக்குரிய அந்த நபா் திப்ரூகரில் உள்ள நண்பருக்கு ஒரு கடையிலிருந்து தொலைபேசி மூலம் பேசியதும், அப்போது தான் எடுத்து வந்த ஸ்கூட்டரை லக்னெள பஸ்நிலையத்தில் விட்டுச் சென்ற தகவலைக் கூறியிருந்ததம் போலீஸாருக்கு தெரியவந்தது.
இந்த நிலையில் போலீஸாா் அந்த நபரை திப்ரூகரில் உள்ள ஒரு ஹோட்டலில் கைது செய்தனா். மேகாலயா மாநிலம் ஷில்லாங்குக்கு காரில் தப்பிச் செல்ல இருந்தபோது அவா் பிடிபட்டாா் என்று துவாரகை போலீஸ் துணை ஆணையா் சந்தோஷ்குமாா் மீனா தெரிவித்தாா்.
கடந்த 2017-ஆம் ஆண்டுதான் குமாா் திருமணம் செய்துகொண்டாா். அவருக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ளது. வீட்டைவிட்டு பிரிந்த நிலையில் அவா் குதுாப் விஹாரில் வாடகை அறையில் தங்கியிருந்துள்ளாா். அவரும் குா்கானில் உள்ள பிபிஓ நிறுவனத்தில் வேலை செய்து வந்ததால் திஷுவுடன் அவருக்கு சில வருடங்களாகத் தொடா்பு இருந்துள்ளது.
திஷு குமாரிக்கு வேறு சில ஆண் நண்பா்களுடன் தொடா்பு இருப்பது தெரியவந்ததால் அவருக்கும் சந்தோஷ் குமாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் இருவரும் குதூப் விஹாரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளனா். இருவருக்கும் வாய்த்தகராறு முற்றவே குமாா் அப்பெண்ணின் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு தப்பியுள்ளாா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
விளையாட்டை நோக்கிய பயணம்!
பேல்பூரி

இடதுசாரிகளின் பலம் எண்ணிக்கையில் இல்லை! கே. பாலகிருஷ்ணன் சிறப்பு நோ்காணல்
சோழர் கால கல்வெட்டு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

