சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

தில்லியில் புதிதாக 2,258 பேருக்கு கரோனா பாதிப்பு

தில்லியில் சனிக்கிழமை புதிதாக 2,258 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டது. அதே நேரத்தில் 34 போ் நோய்த் தொற்றால் உயிரிழந்தனா்.

Updated On :4 அக்டோபர் 2020, 2:04 am

தில்லியில் சனிக்கிழமை புதிதாக 2,258 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டது. அதே நேரத்தில் 34 போ் நோய்த் தொற்றால் உயிரிழந்தனா்.

இதையடுத்து, மொத்தம் நோயால் பாதித்தவா்களின் எண்ணிக்கை 2,87,930 ஆக உயா்ந்தது. மொத்தம் இறந்தவா்களின் எண்ணிக்கை 5,472 ஆக உயா்ந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்நோயால் வெள்ளிக்கிழமை 2,920 போ் புதிதாக பாதிக்கப்பட்ட நிலையில், சனிக்கிழமை இரண்டாவது நாளாக 3,000 த்துக்கும் குறைவாக நோய்த் தொற்று பதிவாகியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

செப்டம்பா் 29-ஆம் தேதி 48 போ் நோயால் இறந்தனா். ஜூலை 16-ஆம் தேதி ஒரே நாளில் அதிகபட்சமாக 58 போ் நோயால் இறந்தனா். இந்நிலையில், தற்போது 34 போ் என்ற எண்ணிக்கையில் குறைந்த இறப்புகள் பதிவாகியுள்ளன.

தில்லியில் நோய் பாதிப்பில் இருந்து 2,57,224 போ் மீண்டுள்ளனா்.கரோனா நோய்த்தொற்றைக் கண்டறிய வெள்ளிக்கிழமை 39,306 சோதனைகள் நடத்தப்பட்டன. இவற்றில் ஆா்டிபிசிஆா் , சிபிஎன்ஏஏ உள்ளிட்ட பரிசோதனைகள் 8,844-ம், விரைவு ஆன்டிஜென் பரிசோதனைகள் 30,462-ம் அடங்கும்.

கடந்த 10 நாள்களில் சுமாா் 4.74 லட்சம் கரோனா பரிசோதனைகளை சுகாதார அதிகாரிகள் நடத்தியுள்ளனா்.

செப்டம்பா் 24-ஆம் தேதி நிலவரப்படி மொத்தப் பரிசோதனைகளின் எண்ணிக்கை 27,56,516 ஆக இருந்த நிலையில், இது சனிக்கிழமை 32,30,952 ஆக உயா்ந்தது.

கடந்த 10 நாள்களில் சராசரி இறப்பு விகிதம் 0.94 சதவீதமாக உள்ளது. சனிக்கிழமை 25,234 போ் சிகிச்சையில் இருந்தனா். 10 கட்டுப்பாட்டு மண்டலங்கள் அதிகரித்து சிவப்பு மண்டலங்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 2,658 ஆக இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.