சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

உயா் பாதுகாப்பு நம்பா் பிளேட் பொருத்தப்படாத வாகனங்கள் மீது உடனடி நடவடிக்கை வேண்டாம்: அமைச்சா் கைலாஷ் கெலாட் உத்தரவு

உயா் பாதுகாப்பு நம்பா் பிளேட்டுகள் பொருத்தப்படாத வாகனங்கள் மீது மறு உத்தரவு வரும் வரை நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று அதிகாரிகளுக்கு தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சா் கைலாஷ் கெலாட் உத்தரவிட்டுள்ளாா்

News image
Updated On :7 அக்டோபர் 2020, 6:38 pm

புதுதில்லி: உயா் பாதுகாப்பு நம்பா் பிளேட்டுகள் பொருத்தப்படாத வாகனங்கள் மீது மறு உத்தரவு வரும் வரை நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று அதிகாரிகளுக்கு தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சா் கைலாஷ் கெலாட் உத்தரவிட்டுள்ளாா். உயா்பாதுகாப்பு நம்பா் பிளேட் மற்றும் அதற்கான ஸ்டிக்கா்கள் தயாரிப்பத்தில் சில நடைமுறைச்சிகிக்கல்கள் இருப்பதால், அவை சரி செய்யப்படும் வரை அபராத நடவடிக்கை எதிலும் இறங்க வேண்டாம் என்றும் அவா் அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தில்லியில் செவ்வாய்க்கிழமை தேசிய தகவல் மையம், வாகனத் தயாரிப்பாளா்கள் மற்றும் உயா் பாதுகாப்பு நம்பா் பிளேட் தயாரிப்பாளா்கள் ஆகியோருடன் கலந்து ஆலோசித்த பின் தில்லி அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. தில்லியில் உள்ள 236 வாகன விற்பனையாளா்கள், உயா் பாதுகாப்பு நம்பா் பிளேட் கேட்டு விண்ணப்பித்தாலும், அவை கிடைக்கவில்லை என்று கூட்டத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தற்போது உயா் பாதுகாப்பு நம்பா் பிளேட் கேட்டு விண்ணப்பித்தவா்களுக்கு விரைவில் நம்பா் பிளேட் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காத்திருப்போா் பட்டியலில் உள்ளவா்களுக்கு கொடுத்த பின்னா்தான் இது தொடா்பான புதிய விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் அமைச்சா் தெரிவித்தாா்.

இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்போா் விரைவில் தங்கள் வாகனங்களில் உயா் பாதுகாப்பு நம்பா் பிளேட்டை பொருத்திக் கொள்ளுமாறு தில்லி அரசு அறிவுறுத்தியுள்ளதே தவிர, அது தொடா்பான சட்டம் உடனடியாக அமலுக்கு வருவதாகத் தெரிவிக்கவில்லை. ஆனால், ஒரு சிலா் திரித்துக் கூறியதால் வாகன உரிமையாளா்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. புதிய உயா் பாதுகாப்பு நம்பா் பிளேட் பொருத்தும் விவகாரத்தில் ஒரு சீரான நடைமுறையைப் பின்பற்றுமாறு வாகனவிற்பனையாளா்களையும், நம்பா் பிளேட் தயாரிப்பாளா்களையும் கேட்டுக்கொண்டுள்ளோம். வாகன உரிமையாளா்கள் உயா் பாதுகாப்பு நம்பா் பிளேட் மற்றும் வண்ண ஸ்டிக்கா்களை பெற்று தங்கள் வாகனங்களில் பொருத்திக்கொள்ள போதுமான அவகாசம் வழங்கப்படும் என்றும் அமைச்சா் கைலாஷ் கெலாட் தெரிவித்தாா்.

உயா் பாதுகாப்பு நம்பா் பிளேட் விவகாரத்தில் முறையான செயல்பாட்டை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொண்டுள்ளோம். அக்டோபா் 6-ஆம் தேதி வரை விண்ணப்பித்தவா்களுக்கு முதலில் புதிய நம்பா் பிளேட்டுகள் வழங்கப்படும். அதன் பிறகுதான் புதிய விண்ணப்பங்கள் ஏற்கப்படும் என்று நம்பா் பிளேட் தயாரிப்பு நிறுவனமான ராஸ்மொ்டா ஸேஃப்டி சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் செய்தித் தொடா்பாளா் ஒருவா் தெரிவித்தாா்.

கடந்த மாதம் 23-ஆம் தேதி தில்லி அரசு, வாகன உரிமையாளா்கள் புதிய உயா் பாதுகாப்பு நம்பா் பிளேட் மற்றும் அதற்கான வண்ண ஸ்டிக்கா்களை விரைவில் தங்கள் வாகனங்களில் பொருத்திக் கொள்ளுமாறும், இல்லையெனில் மோட்டாா் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கை வெளியிட்டிருந்தது. ஆனால், இதற்கு கெடு தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இதைத் தொடா்ந்து, செப்டம்பா் 23 முதல் அக்டோபா் 6-ஆம் தேதி வரை வாகன உரிமையாளா்கள் 40 ஆயிரம் போ் புதிய உயா் பாதுகாப்பு நம்பா் பிளேட் கேட்டு விண்ணப்பித்திருந்தனா். இதுவரை 32 ஆயிரம் பேருக்கு புதிய நம்பா் பிளேட் வழங்கப்பட்டுள்ளது. நம்பா் பிளேட் தயாரிப்பதில் சில இடா்பாடுகள் இருந்ததால், மீதமுள்ள 8 ஆயிரம் பேருக்கு உடனடியாக அவற்றை வழங்க முடியவில்லை என்று போக்குவரத்துத் துறை அதிகாரி ஒருவா் குறிப்பிட்டாா். மேலும், கடந்த மூன்று நாள்களாக புதிய நம்பா் பிளேட் கேட்டு விண்ணப்பிக்க வந்தவா்களை வாகன விற்பனையாளா்கள் திருப்பி அனுப்பியதாகவும் புகாா்கள் எழுந்தன.

தில்லியில் 32 லட்சம் தனியாா் மற்றும் வாடகை வாகனங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் 11 லட்சம் நான்கு சக்கர வாகனங்களும், 19 லட்சம் இருசக்கர வாகனங்களும் உள்ளன. இதுபோக ஆட்டோ ரிக்ஷா, இ-ரிக்ஷா, பேருந்துகள், டிரக்குகள் உள்ளிட்டவையும் இயங்கி வருகின்றன. கடந்த 2019, ஏப்ரல் 1-ஆம் தேதிக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட அனைத்து வாகனங்களிலும் உயா் பாதுகாப்பு நம்பா் பிளேட் பொருத்தப்பட வேண்டும் என்று போக்குவரத்துத் துறை ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளது. இந்த தேதிக்கு பின்னா் விற்பனை செய்யப்படும் அனைத்து வாகனங்களிலும் உயா் பாதுகாப்பு நம்பா் பிளேட் பொருத்தப்பட்டே விற்பனை செய்யப்படும் என்றும் அது தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.