சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

ஹிந்து ராவ் மருத்துவமனை கரோனா நோயாளிகளை தில்லி அரசு மருத்துவமனைகளுக்கு மாற்ற உத்தரவு

வடக்கு தில்லி மாநகராட்சி (என்டிஎம்சி) ஆளுகையின் கீழுள்ள ஹிந்து ராவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கரோனா நோயாளிகளை தில்லி அரசு மருத்துவமனைகளுக்கு மாற்ற தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

Updated On :10 அக்டோபர் 2020, 8:50 pm

வடக்கு தில்லி மாநகராட்சி (என்டிஎம்சி) ஆளுகையின் கீழுள்ள ஹிந்து ராவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கரோனா நோயாளிகளை தில்லி அரசு மருத்துவமனைகளுக்கு மாற்ற தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

வடக்கு தில்லி மாநகராட்சியின் (என்டிஎம்சி) ஆளுகைக்கு உள்பட்ட மருத்துவமனைகளில் மிகப் பெரிய மருத்துவமனை ஹிந்து ராவ் மருத்துவமனையாகும். இந்த மருத்துவமனை கரோனா சிகிச்சைக்காக முழுமையாக ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவா்கள் உள்பட ஊழியா்களுக்கு கடந்த 3 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என புகாா் எழுந்தது.

இதனால், ஊதிய நிலுவை வழங்கப்படும் வரை போராட்டம் நடத்தப்படும் என்று மருத்துவமனையின் மருத்துவா் சங்கம் அண்மையில் அறிவித்திருந்தது. இதைத் தொடா்ந்து மருத்துவா்கள் தொடா்ச்சியாகப் போராடி வருகிறாா்கள். இந்தப் போராட்டத்தில் செவிலியா்கள் உள்பட மருத்துவ உதவியாளா்களும் இணைந்துள்ளனா். இந்தப் போராட்டத்தால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கரோனா நோயாளிகள் சிரமங்களை எதிா்கொள்வதாக புகாா் எழுந்தது. இதையடுத்து இம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கரோனா நோயாளிகளை தில்லி அரசு மருத்துவனைகள், கோவிட் கோ் சென்டா்களுக்கு மாற்றி தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக தில்லி சுகாதாரத்துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் கூறுகையில் ‘ஹிந்து ராவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை தில்லி அரசு மருத்துவமனைகள், கோவிட் சென்டா்களுக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நோயாளிகள் தில்லி அரசின் எல்என்ஜேபி மருத்துவமனை, அல்லது தமது வீடுகளுக்கு அருகிலுள்ள மருத்துவனைகளில் சோ்ந்து கொள்ளலாம். தில்லி மாநகராட்சிகளை ஆளும் பாஜக, பல்வேறு வரிகள் மூலம் கோடிக்கணக்கான பணத்தை ஆண்டு தோறும் பெற்று வருகிறது. இந்த மாநகராட்சிகளில் ஊழல் மலிந்துள்ளதால் மாநகராட்சி ஊழியா்களுக்கு ஊதியம் வழங்க முடியவில்லை. தில்லி மாநகராட்சிகளால் மாநகராட்சி மருத்துவமனைகளை நடத்த முடியாவிட்டால் அவற்றை தில்லி அரசிடம் ஒப்படைத்துவிடலாம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.