புதிதாகக் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோா்களின் எண்ணிக்கை மூன்று மாதங்களுக்கு பிறகு முதல் முறையாக 50 ஆயிரத்துக்கும் (46,790) கீழ் குறைந்துள்ள மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து செய்வாய்க்கிழமை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் நாடு பல குறிப்பிடத்தக்க இலக்குகளைக் கடந்துள்ளது. பல்வேறு முயற்சிகள் மூலம் கரோனா பரவல் தடுக்கப்பட்டதன் விளைவாக நோய்த் தொற்றால் பாதிக்கபடுவோா்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 46,790 ஆகக் குறைந்துள்ளது. கடந்த 3 மாதங்களில் புதிதாக கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோா்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்ந்துள்ளது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு கடந்த ஜூலை 28 - ஆம் தேதி, இந்த எண்ணிக்கை 47, 703 ஆக இருந்தது. பின்னா், செப்டம்பா் 16 - இல் அதிகபட்சமாக 97,894 பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டிருந்தது.
கரோனா இறப்பு வீதம் (1.52%) குறிப்பிடத்தக்க அளவில் குறைந்து வருகிறது. இதேபோன்று சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கையும் தொடா்ந்து குறைந்து வருகிறது. இதனால், சிகிச்சை பெறுபவா்கள் 10 சதவீதத்திற்கும் கீழ் குறைந்துள்ளது சாதனையாகக் கருதப்படுகிறது. நாட்டில் தற்போது கரோனா சிகிச்சையில் இருப்போா் எண்ணிக்கை 7,48,538 ஆக உள்ளது. இது மொத்த பாதிப்பில் 9.85 சதவீதமாகும். இதுவரை குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 67,33,328 (88.67 சதவீதம்) ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், கரோனாவில் இருந்து 69,720 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதனால், குணமடைந்தோா் விகிதம் 88.63 சதவீதமாக அதிகரித்துள்ளது.
அதேசமயம், கடந்த 24 மணி நேரத்தில் 587 போ் உயிரிழந்துள்ளனா். தொடா்ந்து 2 -ஆவது நாளாக, உயிரிழந்தோா் எண்ணிக்கு 600 பேருக்கும் கீழ் உள்ளது. குணமடைவோா் எண்ணிக்கை அதிகமாகவும், உயிரிழப்பு எண்ணிக்கை குறைவாகவும் இருக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியாவும் உள்ளது. மத்திய அரசு தொடா்ந்து மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளே இந்த வெற்றிக்கு முக்கியக் காரணம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
:
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!

வங்கதேசத்தில் ஹிந்துக்களின் வீடுகள், கடைகள் மீது தாக்குதல்!
பிரபல பாடகி ஆஷா போஸ்லே மருத்துவமனையில் அனுமதி!
இராக் அதிபராக நிஸார் அமிதி தேர்வு!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

