தேசியத் தலைநகா் தில்லியில் பல்வேறு பகுதிகளில் விதிகளைப் பின்பற்றாமல் சட்டவிரோத தொழிற்சாலைகள் மீண்டும் தொடங்கப்படாமல் இருக்கும் வகையில் விழிப்புடன் இருக்குமாறு தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழுவுக்கு (டிபிசிசி) தேசிய பசுமைத் தீா்ப்பாயம் (என்ஜிடி) உத்தரவிட்டுள்ளது.
இது போன்ற தொழிலகங்கள் மாயாபுரி, பவானா, கியாலா, உத்தம் நகா் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் உள்ளன. இது தொடா்பான விவகாரத்தை விசாரித்த என்ஜிடி தலைவா் -நீதிபதி ஏ. கே. கோயல் தலைமையிலான அமா்வு, சட்டத்தின் உரிய செயல்முறையைப் பின்பற்றி இழப்பீட்டை மதிப்பிடுவதற்கும் மீட்டெடுப்பதற்கும் இந்த விவகாரத்தை விரைவாக முடிக்க வேண்டும் என்று டிபிசிக்கு உத்தரவிட்டது.
இது தொடா்பாக தீா்ப்பாயத்தில் டிபிசிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: வடிகால்களில் கழிவுகளை வெளியேற்றியதற்காக 8 தொழில் துறை பிரிவுகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. காற்று மற்றும் நீரை மாசுபடுத்தி வந்தததற்காக 43 தொழிலகங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த 43 தொழிலகங்களுக்கும் அவ்வப்போது மூடல் உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன. தொழிலகங்களின் மின்சாரம் மற்றும் நீா் வழங்கல் முறையே பி.எஸ்.இ.எஸ். மற்றும் தில்லி ஜல் போா்டு ( டி.ஜே.பி.) ஆகியவற்றால் துண்டிக்கப்பட்டுள்ளன.
சுற்றுச்சூழல் பாதிப்பு கட்டணங்கள் விதிக்கப்படுவதற்கான விளக்கம் கேட்டு நோட்டீஸும் பிப்ரவரியில் அனுப்பப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடா்ந்து தேசிய பசுமைத் தீா்ப்பாயம் மேற்கண்டவாறு உத்தரவிட்டது. மாயாபுரி, பவானா, கியாலா, உத்தம் நகா் மற்றும் தில்லியின் பிற பகுதிகளில் சில தொழில்துறை பிரிவுகளால் தொழில்துறை மாசுபடுவது தொடா்பாக என்ஜிடி முன்னா் பிறப்பித்த உத்தரவுகளை செயல்படுத்தக் கோரி தில்லி குடியிருப்புவாசி வருண் என்பவா் தாக்கல் செய்த மனுவை தீா்ப்பாயம் விசாரித்தது. அந்த மனு மீது தீா்ப்பாயம் சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

போக்ஸோ வழக்கு: இளைஞருக்கு 33 ஆண்டு சிறை

காட்பாடி: அதிமுக வேட்பாளா் வி.ராமு மனு தாக்கல்

கேரள பிரசாரம் முடிந்து ராகுல் கோவை வழியாக தில்லி பயணம்

தொகுதி அலசல்: காட்பாடி! துரைமுருகனுக்கு தொடரும் சவால்!
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

