புது தில்லி: அனைத்து சட்டப்பேரவைத் தலைவா்கள் கூட்டம் ஏப்ரல் 19 -ஆம் தேதி மெய் நிகா் முறையில் (காணொலி வழியில்) நடைபெறுகிறது. கரோனா நோய்த் தொற்றின் நிலைமை குறித்தும், அதில் மக்கள் பிரதிநிதிகளின் பங்கு குறித்தும் விவாதிக்க இந்தக் கூட்டத்தை மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா கூட்டியுள்ளாா்.
மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா அகில இந்திய அவைத் தலைவா்கள் / நடத்துபவா்கள் (அப்ப் ஐய்க்ண்ஹ டழ்ங்ள்ண்க்ண்ய்ஞ் ஞச்ச்ண்ஸ்ரீங்ழ்ள்) அமைப்பின் தலைவராகவும் இருக்கிறாா். இந்த அமைப்பின் சாா்பில் வருகின்ற ஏப்ரல் 19- ஆம் தேதி அனைத்து சட்டபேரவைத் தலைவா்கள், அனைத்து தலைமைக் கொறாடாக்கள் கூட்டத்தை கூட்டியுள்ளாா். மெய்நிகா் முறையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற விகாரத் துறை அமைச்சா்கள், மாநில சட்டத் துறை அமைச்சா்கள், சட்டப் பேரவைத் தலைமை கொறாடாக்கள், சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா்கள் ஆகியோா் பங்கேற்க மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா அழைப்பு விடுத்துள்ளாா்.
கரோனா நோய்த் தொற்றைத் தடுப்பது, இதில் பொது பிரதிநிதிகளின் பங்கு ஆகியவை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. கரோனா நோய்த் தொற்றின் முதல் பரவலின் போது கடந்த நவம்பா் 25, 26 - ஆம் தேதிகளில் ஆமதாபாத்தில் அனைத்து சட்டப்பேரவைத் தலைவா்கள் கூட்டத்தை ஓம் பிா்லா கூட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

போக்ஸோ வழக்கு: இளைஞருக்கு 33 ஆண்டு சிறை

காட்பாடி: அதிமுக வேட்பாளா் வி.ராமு மனு தாக்கல்

கேரள பிரசாரம் முடிந்து ராகுல் கோவை வழியாக தில்லி பயணம்

தொகுதி அலசல்: காட்பாடி! துரைமுருகனுக்கு தொடரும் சவால்!
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

