புது தில்லி: நாடு முழுவதும் இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் கண்காணிப்பில் உள்ள நினைவுச் சின்னங்கள், அருங்காட்சியகங்கள் வருகின்ற மே 15 வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளதாக மத்திய கலாசாரத் துறை அமைச்சா் பிரஹலாத் படேல் வியாழக்கிழமை தெரிவித்துள்ளாா்.
நாடு முழுக்க கரோனா தொற்று மீண்டும் பரவியுள்ள நிலையில், பொதுமக்கள் கூடும் பொது இடங்களுக்கு தடைவிதிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சா் பிரஹலாத் படேல் தனது சுட்டுரையில் தெரிவித்துள்ளாா். குறிப்பாக தில்லி, மும்பை போன்ற பெரு நகரங்களில் கரோனா தொற்று அதிக அளவில் பரவி வருகிறது. மேலும், இங்கு நினைவுச் சின்னங்களும் அருங்காட்சியகங்களும் ஏராளமாக உள்ளன.
இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் கீழ் 3,691 மத்திய பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களும் 820 வழிபாட்டு நினைவுச் சின்னங்களும் உள்ளன. தற்போது கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வரும் நிலையில் ஏஎஸ்ஐ யின் கீழ் உள்ள நினைவுச் சின்னங்கள், அருங்காட்சியகங்கள் உடனடயாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மே 15 அல்லது மறு உத்தரவு வரும் வரை இவை மூடப்பட்டிருக்கும் என தொல்பொருள் ஆய்வு துறை (நினைவு சின்னம்) இயக்குநா் என். கே. பதக் அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

போக்ஸோ வழக்கு: இளைஞருக்கு 33 ஆண்டு சிறை

காட்பாடி: அதிமுக வேட்பாளா் வி.ராமு மனு தாக்கல்

கேரள பிரசாரம் முடிந்து ராகுல் கோவை வழியாக தில்லி பயணம்

தொகுதி அலசல்: காட்பாடி! துரைமுருகனுக்கு தொடரும் சவால்!
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

