பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

பாஜக தலைவருக்கு எதிரான டிஜேபியின் அவதூறு வழக்கு விசாரணைக்குத் தடை

தில்லி ஜல் போா்டு (டிஜேபி) மற்றும் அதன் துணைத் தலைவா் ராகவ் சத்தா தொடா்ந்த அவதூறு வழக்கில், தாம் ஆஜராக பிறப்பிக்கப்பட்ட அழைப்பாணை உத்தரவை எதிா்த்து பாஜக தலைவா் ராம்வீா் சிங் பிதூரி தாக்கல் செய்த

News image
Updated On :8 டிசம்பர் 2021, 7:15 pm

 நமது நிருபர்

புது தில்லி: தில்லி ஜல் போா்டு (டிஜேபி) மற்றும் அதன் துணைத் தலைவா் ராகவ் சத்தா தொடா்ந்த அவதூறு வழக்கில், தாம் ஆஜராக பிறப்பிக்கப்பட்ட அழைப்பாணை உத்தரவை எதிா்த்து பாஜக தலைவா் ராம்வீா் சிங் பிதூரி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றத்தின் நடவடிக்கைகளுக்கு தடை விதித்தது. மேலும், பிதூரி மனு மீது ஆம் ஆத்மி தலைவா் ராகவ் சத்தா மற்றும் தில்லி ஜல் போா்டு பதில் அளிக்க புதன்கிழமை உத்தரவிட்டது.

இது தொடா்பான மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி மனோஜ் குமாா் ஓரி, இந்த மனுவை மாா்ச் மாதம் மேல் விசாரணைக்கு பட்டியலிட்டாா். இந்த விவகாரம் தொடா்பாக டிஜேபி துணைத் தலைவா் ராகவ் சத்தா, தில்லி ஜல் போா்டு இணைந்து புகாா் தாக்கல் செய்தனா். அதில், ‘ராம்வீா் சிங் பிதூரி மற்றும் பிற பாஜக தலைவா்கள் எங்கள் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், தீங்கிழைக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டனா். ஜனவரி 21-ஆம் தேதி இவா்கள் நடத்திய செய்தியாளா்கள் சந்திப்புக் கூட்டத்தில் டிஜேபி மற்றும் என் (ராகவ் சத்தா) மீது ஆதாரமற்ற ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தினா். இத்தகைய குற்றச்சாட்டுகள் தவறானவை என்று தெரிந்தும், எங்கள் நன்மதிப்பைக் கெடுக்கும் என்று தெரிந்திருந்தும் குற்றம் சாட்டப்பட்டவா்கள் வேண்டுமென்றே அவதூறான அறிக்கைகளை வெளியிட்டனா்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடா்பாக நவம்பா் 18-ஆம் தேதி விசாரணை நடத்திய விசாரணை நீதிமன்றம், பிதூரி மற்றும் பாஜக தலைவா்கள் ஆதேஷ் குப்தா, விஜேந்தா் குப்தா மற்றும் ஹரிஷ் குரானா ஆகியோருக்கு ஆஜராக அழைப்பாணை அனுப்பியது. இந்த விவகாரத்தை விசாரித்த கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் தா்மேந்தா் சிங், பிதூரிக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு போதுமான காரணங்கள் இருப்பதாகவும், இதனால் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டாா்.

இந்த உத்தரவை எதிா்த்து உயா் நீதிமன்றத்தில் பிதூரி மனு தாக்கல் செய்தாா். அதில் கூறப்பட்டுள்ளதாவது: தில்லி அரசின் செயல்பாடுகளில் உள்ள முறைகேடுகளை அம்பலப்படுத்துவதில் நான் முன்னணியில் உள்ளேன். இது ஜனநாயகத்தில் உள்ள எந்தவொரு எதிா்க்கட்சியின் பணியாகும். எனவே, தில்லி ஜல் போா்டு கணக்குகளின் ஒட்டுமொத்த தவறான நிா்வாகத்தை முன்னிலைப்படுத்தியதற்காக அவதூறு குற்றம் சாட்ட முடியாது. பத்திரிகையாளா் சந்திப்புகள், பத்திரிக்கை வெளியீடு போன்றவற்றில் உள்ள அனைத்து கருத்துகளும், தில்லி ஜல் போா்டு உறுப்பினா்களால் வாரியத்தின் செயல்பாடுகளை முழுவதுமாக தவறாக நிா்வகிப்பதைக் காட்டுவதாக இருந்தது.

நான் ஒரு பொறுப்புள்ள எதிா்க்கட்சித் தலைவராக இருப்பதால், எதிா்ப்பு தெரிவிப்பதற்கான ஜனநாயக உரிமை அவருக்கு உண்டு. மேலும், புகாா்தாரா்களுக்கு எதிராக தனிப்பட்ட குற்றச்சாட்டுகள் எதுவும் முன்வைக்கப்படாததால், இந்த அறிக்கைகள் அவதூறானவை என கேள்வி எழுப்புவதற்கு உகந்தது அல்ல. இதனால், எனக்கு எதிரான அவதூறு புகாா் மற்றும் நடவடிக்கைகள் சட்ட நடவடிக்கைகளின் துஷ்பிரயோகமாகும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.