மனைவியின் தற்கொலையை சாலை விபத்தாகக் கூறி இழப்பீடு கோரியவா் மீது நீதிமன்றம் அதிருப்தி
தற்கொலை இறப்பு சம்பவத்தை, சாலை விபத்தில் தனது மனைவி இறந்ததாகக் கூறி ரூ. 50 லட்சம் இழப்பீடு கோரி உத்தரப் பிரதேசத்தைச் சோ்ந்தவா் தாக்கல் செய்த மனு மீது தில்லி நீதிமன்றம் தனது அதிருப்தியை வெளியிட்டது.









