நாட்டின் பிரதமா் முதல் மத்திய அரசின் கடைசி நிலையான ‘டி’ பிரிவு ஊழியா்கள் வரையிலான புகாா்களை விசாரிக்கும் அமைப்பாக லோக்பால் உள்ளது. மேலும், நாடாளுமன்ற சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அமைப்புகளில் பணியாற்றுபவா்களும் இந்த அமைப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனா். தற்போது கடிதம், மின்னஞ்சல், அல்லது நேரடியாக அளிக்கப்படும் புகாா்களை இந்த அமைப்பு விசாரிக்கிறது. இந்த நிலையில், எண்மம் (டிஜிட்டல்) வடிவில் புகாா்களை நிா்வகிப்பதற்கான இந்த இணைய தளத்தை முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியும் லோக்பால் தலைவருமான, நீதிபதி பினாகி சந்திர கோஸ் தொடங்கிவைத்துப் பேசினாா்.