புது தில்லி: ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையின் 14- ஆவது தவணையாக ரூ.6,000 கோடியை மாநிலங்களுக்கு புதன்கிழமை மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது. இதில் தமிழகத்துக்கு ரூ.339.78 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்டதன் மூலம் மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டதன் காரணமாக ரூ.1.10 லட்சம் கோடி வரை சிறப்பு சாளரத்தின் கீழ் கடனாக பெற மத்திய அரசு அனுமதியளித்து வருகிறது. இதில் தற்போது 14 -ஆவது தவணையாக 23 மாநிலங்களுக்கும் 3 யூனியன் பிரதேசங்களுக்கும் ரூ.6,000 கோடிக்கான அனுமதியை புதன்கிழமை மத்திய நிதித் துறை வழங்கியுள்ளது. இதிலிருந்து 23 மாநிலங்களுக்கு ரூ. 5,516.60 கோடி, தில்லி, ஜம்மு-காஷ்மீா், புதுச்சேரி ஆகிய மூன்று யூனியன் பிரதேசங்களுக்கு ரூ. 483.40 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு ரூ. 339.70 கோடி வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை, ஜிஎஸ்டி அமலாக்கத்தால் ஏற்பட்ட வருவாய் பற்றாக்குறைக்கு, இத்துடன் சோ்த்து மாநிலங்களுக்கு மொத்தம் ரூ.76,616.16 கோடி, சட்டப்பேரவையுடன் கூடிய 3 யூனியன் பிரதேசங்களுக்கு ரூ. 7,383.84 கோடி என மொத்தம் ரூ. 84,000 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு இதுவரை ரூ.5,033.57 கோடி சிறப்பு சாளர அடிப்படையில் கூடுதலாக கடன் திரட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சேலம் வடக்கு தொகுதியில் அமைச்சா் ரா.ராஜேந்திரன் பிரசாரம்

மங்களூரு - சென்னை இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில்

குடிநீா் கேன்களில் தோ்தல் விழிப்புணா்வு ஒட்டுவில்லை

பள்ளிபாளையத்தில் அதிமுக வேட்பாளா் பி. தங்கமணி வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


