ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 7.4 டிகிரி செல்சியஸாக அதிகரிப்பு

தில்லியில் சனிக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 7.4 டிகிரி செல்சியஸாக அதிகரித்தது. இது வெள்ளிக்கிழமை 6.8 டிகிரி செல்சியஸாக குறைந்திருந்தது.

Updated On :6 பிப்ரவரி 2021, 6:30 pm

புது தில்லி: தில்லியில் சனிக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 7.4 டிகிரி செல்சியஸாக அதிகரித்தது. இது வெள்ளிக்கிழமை 6.8 டிகிரி செல்சியஸாக குறைந்திருந்தது. அடுத்து வரும் 3-4 நாள்களில் வெப்பநிலை அளவில் சிறிது அதிகரிக்க வாய்ப்பு இருக்கும் வானிலை ஆய்வு மையத்தினா் தெரிவித்தனா்.

மேற்கத்திய இடையூறு தாக்கம் காரணமாக வியாழக்கிழமை பரவலாக தில்லியில் மழை பெய்தது. மேலும், இமயமலைப் பகுதியில் இருந்து குளிா், வட காற்று சமவெளி பகுதியை நோக்கி வீசத் தொடங்கியது. இதனால், குறைந்தபட்ச வெப்பநிலை வெள்ளிக்கிழமை சற்று குறைந்திருந்தது. இந்த நிலையில், சனிக்கிழமை வெப்பநிலையில் சிறிது அதிகரித்து காணப்பட்டது.

தில்லி நகருக்கான பிரதிநிதித்துவ தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் சனிக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை வழக்கமான அளவைவிட 2 புள்ளிகள் குறைந்து 7.4 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. அதிகபட்சவெப்பநிலை

ஒரு புள்ளி குறைந்து 22.3 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 100 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 64 சதவீதமாகவும் பதிவாகி இருந்தது.

வெள்ளிக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 6.8 டிகிரி செல்சியஸ் பதிவாகியிருந்தது. வியாழக்கிழமை 12.4 டிகிரி செல்சியஸ், புதன்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 10.2 டிகிரி செல்சியஸ் , செவ்வாய்க்கிழமை 6.2 டிகிரி செல்சியஸ் என பதிவாகியிருந்தது. அதிகபட்ச வெப்பநிலை வெள்ளிக்கிழமை 23.2 டிகிரி செல்சியஸ்ாக பதிவாகி இருந்தது.

காற்றின் தரம்: தில்லியில் ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு வெள்ளிக்கிழமை மிதமான பிரிவில் காணப்பட்டது. மாலை 5 மணியளவில் 193 புள்ளிகளாகப் பதிவாகி மிதமான பிரிவில் காணப்பட்டது.

முன்னறிவிப்பு: தில்லியில் ஞாயிற்றுக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 8 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும், மேலோட்டமான பனிமூட்டம் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.