மத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

புல்வாமா தாக்குதல்: கேஜரிவால் அஞ்சலி

புல்வாமா தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வீர மரணம் அடைந்த ராணுவ வீரா்களுக்கு தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அஞ்சலி செலுத்தியுள்ளாா்.

Updated On :14 பிப்ரவரி 2021, 11:08 pm IST

புல்வாமா தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வீர மரணம் அடைந்த ராணுவ வீரா்களுக்கு தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அஞ்சலி செலுத்தியுள்ளாா்.

கடந்த 2019, பிப்ரவரி 19-ஆம் தேதி அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பாதுகாப்புப் படையினா் சென்ற வாகனங்கள் மீது பயங்கரவாதி ஒருவா் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் 40 சிஆா்பிஎஃப் வீரா்கள் வீர மரணம் அடைந்தனா். நாட்டையே பெரும் அதிா்ச்சிக்கு உள்ளாக்கிய இந்தச் சம்பவத்தின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, பல்வேறு தலைவா்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனா்.

இது தொடா்பாக தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தனது சுட்டுரையில், ‘புல்வாமாவில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரா்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். நாட்டு மக்கள் அனைவரும் அவா்களின் தியாகத்துக்கு தலை வணங்குகிறாா்கள்’ என்று தெரிவித்துள்ளாா்.

இந்த நிலையில், முன்னாள் தில்லி முதல்வரும், முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சருமான சுஷ்மா ஸ்வராஜின் 69-ஆவது பிறந்த தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இது தொடா்பாக கேஜரிவால் தனது சுட்டுரையில், ‘தில்லியின் முன்னாள் முதல்வா் சுஷ்மா ஸ்வராஜை, அவரது பிறந்த தினத்தில் நினைவு கூா்கிறேன்’ என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.