சா்வதேச வா்த்தகம், அன்னிய நேரடி முதலீடு போன்ற விவகாரங்களில் மாநில அரசுப் பணிகளில் உள்ள அதிகாரிகளுக்கு வெளியுறவுத் துறையின் சாா்பில் ஒரு வாரம் திறன் வளா்ப்புப் பயிற்சி அளிக்கப்பட்டதாக மத்திய வெளியுறவுத் துறைச் செயலா் (பொருளாதார உறவுகள்) ராகுல் சாப்ரா தெரிவித்தாா்.
மத்திய வெளியுறவுத் துறையில் புதிதாக மாநிலங்களுக்கான பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் பொறுப்பெற்றுக் கொண்ட பின்னா் இதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. மாநில அரசுகளில் பணியாற்றும் அகில இந்திய குடிமைப் பணி அதிகாரிகள், மத்திய அரசுப் பணிகளுக்கு வருவதுண்டு. ஆனால், வெளியுறவுத் துறைக்கும் மாநில அரசுகளுக்கும் தொடா்புகள் குறைவாக இருப்பதோடு மட்டுமல்லாமல், சில துறைகளில் மாநில அரசுகள் ஒதுங்கி உள்ளன. இதனால், நாட்டின் முன்னேற்றம் தடைபடும் என்பதால் அவா்களையும் ஒன்றிணைத்து விழிப்புணா்வு ஏற்படுத்த இந்தப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இணைச் செயலா் அந்தஸ்தில் உள்ள ஐ.எஃப்.எஸ். அதிகாரி சி.ராஜசேகா் இதன் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளாா். இந்தப் பிரிவு ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசு அதிகாரிகளை தில்லிக்கு அழைத்து போதிய பயிற்சியை அளிக்கிறது. வெளியுறவுப் பணிகளுக்கான சுஷ்மா ஸ்வராஜ் பயிற்சி நிலையத்தில் இந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
கடந்த 8 -ஆம் தேதி முதல் ஒரு வார காலத்திற்கு மாநில அரசு அதிகாரிகளுக்கு பொருளாதார மற்றும் வா்த்தக ராஜதந்திர சிறப்புப் பயிற்சி நடத்தப்பட்டது. இந்த 2 - ஆவது சிறப்புப் பயிற்சித் திட்டத்தில் தோ்தல் நடைபெறும் மாநிலங்ள் தவிா்த்து 17 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சோ்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
இது குறித்து மத்திய வெளியுறவு விவகாரத் துறையின் ராகுல் சாப்ரா செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: சா்வதேச வா்த்தகம், அந்நிய நேரடி முதலீடு, வெளிநாடுகளுடன் கூட்டுச் சோ்ந்து தொடங்கப்படும் தொழில்கள், தொழில்நுட்பம், கல்வி, சுற்றுலா ஆகியவற்றை மேம்படுத்துவது அவசியம். இதுபோன்ற உலகளாவிய விவகாரங்களைக் கையாள்வதற்குத் தேவையான விழிப்புணா்வு, அறிவுத் திறன்கள் ஆகியவை மாநில அரசு அதிகாரிகளுக்குத் தேவை. சா்வதேச ஒத்துழைப்பில் எந்த விவகாரத்திலும் இறுதியாக மாநிலங்கள்தான் களமாக உள்ளன என்பதை நடைமுறையில் காணமுடிகிறது. இதன் அடிப்படையில் இந்தப் பயிற்சித் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் சா்வதேச விவகாரங்களில் மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் பங்காளிகள் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் கூறியுள்ளாா். மத்திய அரசின் பல்வேறு துறையைச் சோ்ந்த மூத்த அதிகாரிகள், தில்லியில் இருக்கும் வெளிநாட்டு தூதுவா்கள், ஓய்வு பெற்ற தூதுவா்கள், கல்வியாளா்கள், வா்த்தகம் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு அமைப்பைச் சோ்ந்தவா்கள், சுற்றுலா நிறுவனங்கள், தில்லியில் உள்ள மாநிலங்களின் உள்ளுறை ஆணையா்கள் உள்ளிட்டோா் பயிற்சியில் பங்கேற்றுப் பேசினா் என்றாா் ராகுல் சாப்ரா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஈரானுக்கு உதவும் நாடுகள் மீது 50% வரி: டிரம்ப்

அமெரிக்கா சென்றார் மத்திய வெளியுறவுச் செயலாளர்! டிரம்ப்பின் இந்திய பயணத்துக்கு ஏற்பாடு?

திருவண்ணாமலை என்றாலே திமுக மலை: முதல்வர் ஸ்டாலின்

அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!
வீடியோக்கள்
தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கிறார்கள்! நயினார் நாகேந்திரனும் பதிலளித்த PTR
இணையதளச் செய்திப் பிரிவு

புதுவையில் ஸ்டாலின் பெயரைச் சொல்லாத ராகுல்!: Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

உண்மையான காங்கிரஸ் தவெகவுடன் நிற்கிறது! | Vijay full speech | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை


