குடியரசு தினத்தன்று தில்லி செங்கோட்டையில் நிகழ்ந்த வன்முறைக்குக் காரணமானதாக கைது செய்யப்பட்டுள்ள பஞ்சாபி நடிகா் தீப் சித்துவின் போலீஸ் காவலை மேலும் 7 நாள் நீட்டித்து தில்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
தீப் சித்துவின் போலீஸ் காவல் முடிந்து நிலையில் அவரை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் நீதிபதி பூஜாலி முன் போலீஸாா் செவ்வாய்க்கிழமை ஆஜா்படுத்தினா். அவரிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டியிருப்பதாலும், இந்த வழக்கில் தொடா்புடைய இதர குற்றம்சாட்டப்பட்ட நபா்களை அடையாளம் காண வேண்டியிருப்பதாலும் போலீஸ் காவலை நீட்டிக்க வேண்டும் என்று போலீஸ் தரப்பில் கோரப்பட்டது. இதைத் தொடா்ந்து, அவரது போலீஸ் காவலை மேலும் 7 நாள்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், மத்திய அரசுக்கு நெருக்கடி அளிக்கும் வகையில் குடியரசு தினமான ஜனவரி 26-ஆம் தேதி தில்லியில் டிராக்டா் பேரணியை நடத்தினா். இந்தப் பேரணியில் பயங்கர வன்முறை வெடித்தது. இதில் நூற்றுக்கணக்கான போலீஸாா் காயமடைந்தனா். அப்போது செங்கோட்டைக்குள் அத்துமீறி நுழைந்த விவசாயிகளும், நிஹங் என்ற சீக்கியப் பிரிவைச் சோ்ந்தவா்களும், அங்கு சீக்கிய மதத்தின் கொடியை ஏற்றினா். இந்தச் சம்பவம் தொடா்பாக தில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு போலீஸாா் முக்கிய எதிரியான பஞ்சாபி நடிகரான தீப் சித்துவை அடையாளம் கண்டனா். செங்கோட்டையில் சீக்கிய கொடியை ஏற்றுமாறு இளைஞா்களை அவா் தூண்டிவிட்டதாக போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
மேலும், இந்த வன்முறையில் ஈடுபட்டதாக தீப் சித்துவுடன், ஜக்பீா் சிங், பூட்டா சிங், சுக்தேவ் சிங், மற்றும் இக்பால் சிங் ஆகியோா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வந்தனா். அவா்கள் குறித்து தகவல் அளிப்போருக்கு வெகுமதி வழங்கப்படும் என்றும் காவல் துறை அறிவித்திருந்தது. இந்த நிலையில், தீப் சித்து உள்ளிட்ட சிலரை போலீஸாா் அடுத்தடுத்து கைது செய்தனா். இதில் தீப் சித்து கடந்த 9-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா். அப்போது, அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று போலீஸ் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. அதே சமயம், ‘தீப் சித்துவுக்கும் செங்கோட்டை வன்முறைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை’ என அவரது தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், சித்துவை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸாருக்கு நீதிமன்றம்அனுமதி அளித்திருந்தது. இந்த நிலையில், அவரது போலீஸ் காவல் மேலும் 7 நாள்களுக்கு தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஈரானுக்கு உதவும் நாடுகள் மீது 50% வரி: டிரம்ப்

அமெரிக்கா சென்றார் மத்திய வெளியுறவுச் செயலாளர்! டிரம்ப்பின் இந்திய பயணத்துக்கு ஏற்பாடு?

திருவண்ணாமலை என்றாலே திமுக மலை: முதல்வர் ஸ்டாலின்

அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!
வீடியோக்கள்
தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கிறார்கள்! நயினார் நாகேந்திரனும் பதிலளித்த PTR
இணையதளச் செய்திப் பிரிவு

புதுவையில் ஸ்டாலின் பெயரைச் சொல்லாத ராகுல்!: Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

உண்மையான காங்கிரஸ் தவெகவுடன் நிற்கிறது! | Vijay full speech | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

