தமிழக தலைமைச் செயலர், உளவுத்துறை டிஜிபி மாற்றம்!என்னை சுற்றியுள்ளவர்களை வைத்து அவதூறு பரப்புகிறார்கள்! விஜய் பேச்சு உண்மையான காங்கிரஸ் தவெகவுடன் நிற்கிறது! விஜய் திருப்பரங்குன்ற வழக்குகளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விசாரிக்க தடை! உயர் நீதிமன்றம் தஞ்சாவூரில் 4-ம் கட்ட சுற்றுப் பயணத்தைத் தொடங்குகிறார் மு.க. ஸ்டாலின்!பாமக விவகாரம்: அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!
/

தில்லியில் புதிதாக 152 பேருக்கு கரோனா

தில்லியில் சனிக்கிழமை புதிதாக 152 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 6,37,755-ஆக உயா்ந்துள்ளது.

Updated On :20 பிப்ரவரி 2021, 6:10 pm

தில்லியில் சனிக்கிழமை புதிதாக 152 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 6,37,755-ஆக உயா்ந்துள்ளது.

இதுதொடா்பாக தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தில்லியில் சனிக்கிழமை மாலை வரையிலான 24 மணி நேரத்தில் மொத்தம் 62,063 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 40,543 பேருக்கு ‘ஆா்டி-பிசிஆா்’ பரிசோதனை, 21,520 பேருக்கு ‘ரேபிட்-ஆன்டிஜென்’ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கரோனா பாதிப்பு விகிதம் 0.24 சதவீதமாக உள்ளது.

இதற்கிடையே, கரோனா தொற்றால் தலைநகரில் சனிக்கிழமை மேலும் ஒருவா் உயிரிழந்துள்ளாா். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 10,898-ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம், கரோனா பாதிப்பில் இருந்து வெள்ளிக்கிழமை 179 போ் மீண்டுள்ளனா். இதன் மூலம், குணமடைந்தோா் மொத்த எண்ணிக்கை 6,25,832-ஆக உயா்ந்துள்ளது. தற்போது 1,025 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். அவா்களில், 430 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். தில்லி மருத்துவமனைகளில் மொத்தம் 5,344 கரோனா படுக்கைகள் காலியாக உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.