ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!ராஜஸ்தானில் மர்ம காய்ச்சலுக்கு 5 குழந்தைகள் பலி! கண்காணிப்பு தீவிரம்!தில்லிக்கு எதிரான போட்டியில் தோனி விளையாட மாட்டார்!தேர்தலுக்கிடையே நாடாளுமன்ற கூட்டத்தொடர்: மத்திய அரசு மீது திருச்சி சிவா குற்றச்சாட்டுதமிழக தலைமைச் செயலர், லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபி மாற்றம்!
/

தமிழக தலைமைச் செயலர், லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபி மாற்றம்!

தமிழக தலைமைச் செயலாளர் முருகானந்தம் மாற்றப்பட்டுள்ளது குறித்து...

News image

சாய் குமார், சந்தீப் மித்தல் - படம்: டிஎன்எஸ்

Updated On :8 ஏப்ரல் 2026, 9:55 am

தமிழக தலைமைச் செயலர் முருகானந்தத்தை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. புதிய தலைமைச் செயலராக சாய் குமார் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதத்தை மாற்றி, ஆயுதப்படை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக சந்தீப் மித்தல் நியமிக்கப்பட்டுள்ளார்.

Story image

உத்தரவை உடனே அமல்படுத்தி பணியில் சேர்ந்தது குறித்து மாலைக்குள் அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் இருவரையும், தேர்தல்கள் நிறைவடையும் வரை தேர்தல் தொடர்பான எந்தப் பதவியிலும் நியமிக்கப்படக்கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக இருந்தவர் சாய் குமார் ஐஏஎஸ். இவர், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தனிச் செயலராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story image

முன்னதாக, தமிழக காவல் துறையின் புதிய தலைமை இயக்குநராக (டிஜிபி) சந்தீப் ராய் ரத்தோர் ஏப். 2 ஆம் தேதி நியமனம் செய்யப்பட்டார்.

மேலும், தாம்பரம், மதுரை மாநகரக் காவல் ஆணையர்கள், மேற்கு மண்டல ஐஜி ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

சட்டப்பேரவைத் தேர்தல் காரணமாக தமிழக காவல் துறையில் உயர் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் கடந்த இரு வாரங்களாக மாற்றி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக தமிழக காவல் துறையின் பொறுப்பு தலைமை இயக்குநராக இருந்த ஜி.வெங்கடராமனை மாற்றிய நிலையில், தமிழக தலைமைச் செயலர், லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபி ஆகியோரையும் மாற்றி இந்திய தேர்தல் ஆணையம் இன்று(ஏப். 8) உத்தரவிட்டுள்ளது.

The Election Commission has issued an order transferring Tamil Nadu Chief Secretary Muruganandam.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.