ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலர் சாய்குமார் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக முதல்வராக சி. ஜோசப் விஜய் பொறுப்பேற்றதிலிருந்து ஐஏஎஸ், ஐபிஎஸ் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பணியிட மாற்றம் செய்து வருகிறார். கடந்த செவ்வாய்க்கிழமை உளவுத்துறை டிஜிபி, சைபர்கிரைம் டிஜிபி உள்பட 10 அதிகாரிகள் மாற்றப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து இன்று மாலை காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், பால் உற்பத்தி ஊழல் கண்காணிப்பு அதிகாரியாக இருந்த ராஜீவ் குமார், உளவுத் துறை ஐஜியாக இருந்த செந்தில்வேலன் உள்ளிட்டோர் மாற்றப்பட்டனர்.
இந்த நிலையில், துறைச் செயலர் பணியிட மாற்றம் தொடர்பான அரசாணையை தமிழக அரசின் தலைமை செயலர் சாய்குமார் இன்று (மே 14) வெளியிட்டார்.
அந்த அறிக்கையில்,
“தொழில், முதலீட்டுத்துறை செயலராக விஜயகுமார் நியமியக்கப்பட்டுள்ளார். முன்னதாக, தொழில் துறைச் செயலராக இருந்த அருண் ராய் உயர்கல்வித்துறை செயலாளராக நியமியக்கப்பட்டுள்ளார்.
கால்நடைத்துறை செயலராக இருந்த சுப்பையன் ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். (ஏற்கனெவே, ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறைச் செயலராக இருந்த லக்ஷ்மி பிரியா முதல்வரின் தனிச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.)
தில்லி தமிழ்நாடு இல்ல உறைவிட ஆணையராக ஜெயா நியமிக்கப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்ட ஆட்சியராக இளம்பகவத் நியமிக்கப்பட்டுள்ளார்.
சுற்றுலாத்துறை ஆணையராக சண்முகம் நியமியக்கப்பட்டுள்ளார்.
செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குநர், தமிழ் வளர்ச்சித்துறை, தகவல்துறைச் செயலராக அருண் தம்புராஜ் நியமியக்கப்பட்டுள்ளார்.
கலை மற்றும் கலாசாரத்துறை இயக்குநராக பிருந்தாதேவி நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு குடிமைப்பொருள் விநியோகக் கழக தலைவராக உமாநாத் நியமிக்கப்பட்டுள்ளதாக” அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Summary
Transfer of IAS Officers Arun Thamburaj Appointed Director of Information Department!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தலைமைச் செயலராக தலைமைத் தோ்தல் அதிகாரி: மேற்கு வங்க பாஜக அரசுக்கு ராகுல் கண்டனம்

மேற்கு வங்கம்: தலைமைச் செயலராக மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி நியமனம்!

தலைமைச் செயலா் மாற்றம் மக்களை எப்படி பாதிக்கும்? உயா்நீதிமன்றம் கேள்வி

தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

