
தேமுதிகவில் இருந்து மீசை ராஜேந்திரன் விலகல்!
தேமுதிகவில் இருந்து மீசை ராஜேந்திரன் விலகியது குறித்து...

மீசை ராஜேந்திரன் - படம்: இன்ஸ்டாகிராம்
தேமுதிகவில் இருந்து நடிகர் மீசை ராஜேந்திரன் விலகுவதாக அறிவித்துள்ளார்.
கட்சியில் இருந்து தன்னை விடுவிக்குமாறு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
”கேப்டன் மன்றத்தில் 31 ஆண்டும், தேமுதிகவில் 21 ஆண்டும் உழைத்திருக்கிறேன், விசுவாசத்திற்கு இடம் இல்லாததால் கட்சியில் இருந்து விலகுகிறேன், வேறு கட்சியில் இணைவது குறித்து எதுவும் ஆலோசிக்கவில்லை” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
”மற்ற கட்சிகளில் இருந்து அழைப்பு வந்தால், சேர்வது குறித்து ஆலோசிக்கப்படும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், தேமுதிகவில் இருந்து தன்னை விடுவிக்குமாறு அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதாவுக்கு மீசை ராஜேந்திரன் கடிதம் எழுதியுள்ளார்.
தேமுதிக சார்பில் 3 முறை சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட ராஜேந்திரனுக்கு இம்முறை வாய்ப்பு தராததால், அதிருப்தியில் இருந்த ராஜேந்திரன் தேமுதிகவில் இருந்து விலகியதாகக் கூறப்படுகிறது
Summary
Actor Meesai Rajendran has announced that he is quitting the DMDK.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







