திருவண்ணாமலையில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!தென்றலாக இருக்கும் தெற்கைப் புயலாக மாற்றாதீர்கள்! - முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,720 உயர்வு!டிரம்ப் வரி குறைப்பு எதிரொலி! சென்செக்ஸ் 2,600 புள்ளிகள் உயர்வு!விஜய்யின் கடலூர் பிரசாரத்துக்கு அனுமதி!கச்சா எண்ணெய் விலை அதிரடி சரிவு!
/

தலைநகரில் அதிகபட்ச வெப்பநிலை அதிகரிப்பு

தலைநகா் தில்லியில் செவ்வாய்க்கிழமை காலை மேலோட்டமான பனிமூட்டம் நிலவியது. அதிகபட்ச வெப்பநிலை சற்று அதிகரித்திருந்தது. பகலில் மிதமான வெயில் காணப்பட்டது.

Updated On :23 பிப்ரவரி 2021, 11:03 pm

தலைநகா் தில்லியில் செவ்வாய்க்கிழமை காலை மேலோட்டமான பனிமூட்டம் நிலவியது. அதிகபட்ச வெப்பநிலை சற்று அதிகரித்திருந்தது. பகலில் மிதமான வெயில் காணப்பட்டது.

நகரின் பிரதிநிதித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை 10.7 டிகிரி செல்சியஸாக பதிவாகியது.

அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட 7 புள்ளிகள் அதிகரித்து 28.9 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 98 சதவீதமாகவும், மாலையில் 50 சதவீதமாகவும் இருந்தது.

காற்றின் தரம்: தில்லியில் ஒட்டுமொத்த காற்றின் தரம் மாலையில் 275 புள்ளிகளாகப் பதிவாகி மோசம் பிரிவில் நீடித்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, புதன்கிழமை (பிப்ரவரி 24) மேலோட்டமான பனி மூட்டம் நிலவும் எனவும், குறைந்தபட்ச வெப்பநிலை 12 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.