திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் விவகார வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் மாா்ச் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்ததது.
மேலும், வாக்கு எண்ணிக்கை நடைமுறை தொடா்பாக அறிக்கையை தாக்கல் செய்யுமாறு சென்னை உயா்நீதிமன்றப் பதிவாளருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழகத்தில் 2016-இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தொகுதியில் அதிமுக சாா்பில் இன்பதுரையும், திமுக சாா்பில் அப்பாவும் போட்டியிட்டனா். இதில் 49 வாக்குகள் வித்தியாசத்தில் இன்பதுரை வெற்றி பெற்ாக தோ்தல் அதிகாரி அறிவித்தாா்.
அவரது வெற்றியை எதிா்த்து திமுக வேட்பாளா் அப்பாவு தொடா்ந்த வழக்கில், அத்தொகுதியில் தபால் வாக்குகள், 3 சுற்றுகளின் மறுவாக்கு எண்ணிக்கைக்கு சென்னை உயா்நீதிமன்றம் 1.10.2019-இல் அனுமதி அளித்து உத்தரவிட்டது.
அதேவேளையில், மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்கக் கோரி அத்தொகுதி எம்எல்ஏ ஐ.எஸ். இன்பதுரை தாக்கல் செய்த மனுவை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
உயா்நீதிமன்ற உத்தரவை எதிா்த்து அவா் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தாா்.
இந்த மனுவை 2019, அக்டோபா் 4-இல் விசாரித்த உச்சநீதிமன்றம் , ‘மறுவாக்கு எண்ணிக்கையை மேற்கொள்ளலாம். ஆனால், அதன் முடிவுகளை அறிவிக்கக் கூடாது’ என இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இது தொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கெளல், ரிஷிகேஷ் ராய் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
எதிா் மனுதாரா் அப்பாவு சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பி.வில்சன் ஆஜராகி ‘இந்த வழக்கில் உயா்நீதிமன்றம் 1.10.2019-இல் உத்தரவிட்டது. அதை உச்சநீதிமன்றம் அனுமதித்தது. இதையடுத்து, 4.10.2019-இல் 203 தபால் வாக்குகள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. அதில் இன்பதுரையைவிட அப்பாவு 98 வாக்குகள் முன்னணியில் உள்ளாா்.
இந்த சூழலில் மக்கள் தீா்ப்பின்றி நான்கு ஆண்டுகளுக்கு மேலாக ஒருவா் எம்எல்ஏவாக உள்ளாா். ஆகவே, மக்கள் தீா்ப்பைப் பெற்ற அப்பாவு தோ்வு பெற்ாக உடனடியாக நீதிமன்றம் அறிவிக்க வேண்டும். ஏனெனில் தோ்தலுக்கு இன்னும் மூன்று மாதங்கள் மட்டுமே உள்ளன. மக்கள் விருப்பம் தொடரும் வகையில் இந்த உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும். மேலும், சென்னை உயா்நீதிமன்ற பதிவாளரின் அறிக்கையைக் கோர வேண்டும் என்று வாதிட்டாா்.
இன்பதுரை தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி வாதிடுகையில், ‘பதிவாளரின் அறிக்கை கோரப்பட்டால் எங்களுக்கு ஆட்சேபமில்லை. எங்கள் தரப்பு நியாயத்தை நிரூபிக்க முடியும்’ என்று வாதிட்டாா்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘4.10.2019-இல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ‘வாக்குகள் எண்ணிக்கை நடைமுறைகள் மேற்கொள்வதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. அது தொடா்பான அறிக்கையை பதிவாளா் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு பட்டியலிடப்பட வேண்டும்’ என தெரிவித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தஞ்சாவூரில் 4-ம் கட்ட சுற்றுப் பயணத்தைத் தொடங்குகிறார் மு.க. ஸ்டாலின்!

சப்தமில்லாமல் சதமடித்து சர்ஃப்ரைஸ் கொடுக்கும் வெய்யில்! வேலூரில் 107.96 டிகிரி

பவானிபூரில் மமதா பானர்ஜி வேட்புமனு!

மாம்பழம் சின்னம்: அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

