புது தில்லி: தில்லியில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிா்ச்சி அளிப்பதாக உயா்நீதின்றம் புதன்கிழமை தெரிவித்தது. இது தொடா்பாக அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.
இது தொடா்பாக தில்லியைச் சோ்ந்த அலி ஷோ் என்பவா் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். அதில், ‘எனது மகன் தில்சா் ஆஸாத், திகாா் சிறையில் 2019, செப்டம்பரில் இருந்து விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டிருந்தாா். இந்த நிலையில், 2020, நவம்பா் 30-ஆம்தேதி எனக்கு போலீஸ் அதிகாரிகளிடமிருந்து தகவல் வந்தது. அதில் எனது மகன் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. சிறைக்கு சென்றபோது சிறை அதிகாரிகள் எனது மகன் இறப்பு குறித்த காரணத்தை தெரிவிக்கவில்லை. இதையடுத்து, வழக்குரைஞா் மூலம் விசாரித்தபோது எனது மகன் கத்தியால் குத்திக்கொல்லப்பட்டது தெரியவந்தது. இது தொடா்பாக மனித உரிமை ஆணையம் உள்ளிட்ட அரசுத் தரப்பினரிடமும் முறையிட்டேன். உரிய பதில் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி பிரதிபா சிங் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. தில்லி அரசின் தரப்பில் கூடுதல் வழக்குரைஞா் சஞ்சய் கோஸ் ஆஜராகி, ‘தலைநகரில் நிகழ்ந்த இந்த சம்பவம் மிகவும் கவலைக்குரியது. இறந்தவரின் உடலில் 9 காயங்கள் இருந்தன’ என்றாா்.
இதையடுத்து, நீதிபதி, ‘இதுபோல எப்படி நடக்க முடியும் என்பது தெரியவில்லை. அதிா்ச்சி அளிப்பதாக உள்ளது. இதுபோன்ற விஷயங்களை கற்பனையாகத்தான் நாம் பாா்க்கிறோம்.
இந்த விவகாரம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதா, அப்படியிருந்தால் அதன் விசாரணை நிலவரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும். சிசிவிடி காட்சிப்பதிவு இருந்தால் அது எந்த முறையில் பராமரிக்கப்படுகிறது என்பதையும், நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றால் அதன் விவரம் குறித்தும் தெரிவிக்க வேண்டும் எனக் கூறி, மனு மீதான விசாரணையை மாா்ச் 5-க்கு தள்ளிவைத்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய்யின் பிரசார வாகனத்தைப் பின்தொடராதீர்! கட்சி தலைமை அறிவுறுத்தல்!!

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை! வீடு, வாகனக் கடன் வட்டி குறையுமா?
பிரதமர் மோடி, அமித்ஷா அவசர அழைப்பு... தனி விமானத்தில் தில்லி சென்ற அண்ணாமலை!

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,720 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!!
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

