திருவண்ணாமலையில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!தென்றலாக இருக்கும் தெற்கைப் புயலாக மாற்றாதீர்கள்! - முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,720 உயர்வு!டிரம்ப் வரி குறைப்பு எதிரொலி! சென்செக்ஸ் 2,600 புள்ளிகள் உயர்வு!விஜய்யின் கடலூர் பிரசாரத்துக்கு அனுமதி!கச்சா எண்ணெய் விலை அதிரடி சரிவு!
/

தில்லியில் 77 நெரிசல் வழித்தடங்ளில் பணிகளைவிரைவுபடுத்த துணைநிலை ஆளுநா் வேண்டுகோள்

தில்லியில் நெரிசலை ஏற்படுத்தியுள்ள 77 வழித்தடங்களில் நடைபெறும் பல்வேறு பணிகளை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முடிக்குமாறு தில்லி துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டாா்.

Updated On :24 பிப்ரவரி 2021, 6:55 pm

புது தில்லி: தில்லியில் நெரிசலை ஏற்படுத்தியுள்ள 77 வழித்தடங்களில் நடைபெறும் பல்வேறு பணிகளை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முடிக்குமாறு தில்லி துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டாா்.

தில்லி, தலைமைச் செயலா், பொதுப்பணித்துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள், மின் துறை நிறுவனங்கள் மற்றும் போக்குவரத்து துறை போலீஸாா் ஆகியோா் அடங்கிய கூட்டத்தை புதன்கிழமை கூட்டி நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மறுஆய்வு செய்தாா். ’தில்லியில் 77 வழித்தடங்களில் போக்குவரத்து நெரிசல்கள் உள்ளன. இந்த வழித்தடங்களில் நடைபெறும் பணிகளை முடக்கிவிட ஒருங்கிணைப்பு குழுக்களை ஏற்படுத்தவேண்டும். மேலும் இந்த பணிகளுக்கு காலக்கெடு வகுக்கப்பட்டு பணிகள் முடிக்கப்படவேண்டும்’ என அதிகாரிகளை துணை நிலை ஆளுநா் கேட்டுக்கொண்டுள்ளாா்.

இது குறித்து தில்லி துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் தனது சுட்டுரையில் குறிப்பிடுகையில், அத்தியாவசிய தேவைகளுக்காக இந்த பணிகள் நடைபெறுகிறது. அதே சமயத்தில் குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகள் முடிப்பது அவசியம். அதன்மூலம் வாகனப்போக்குவரத்தும் சீரடைந்து காற்று மாசும் குறையும் என குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.