தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,720 உயர்வு!டிரம்ப் வரி குறைப்பு எதிரொலி! சென்செக்ஸ் 2,600 புள்ளிகள் உயர்வு!விஜய்யின் கடலூர் பிரசாரத்துக்கு அனுமதி!கச்சா எண்ணெய் விலை அதிரடி சரிவு!அதிமுக ஆட்சி அமைந்ததும் தமிழ்நாட்டில் சாதிவாரிகணக்கெடுப்பு நடத்தப்படும்: எடப்பாடி பழனிசாமிதிமுக தேய்ந்து வருகிறது; முன்னாள் அதிமுகவினரே திமுக வேட்பாளர்கள் - இபிஎஸ் விமர்சனம்48 மணிநேரத்துக்கு வெளியே செல்ல வேண்டாம்: ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்!மகளிருக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 2,000! மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடுஒரு முழு நாகரிகமே அழியப்போகிறது, மீண்டும் திரும்பாது : ஈரானுக்கு டிரம்ப் இறுதி எச்சரிக்கைஈரான் கார்க் தீவில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்
/

மாநகராட்சி இடைத்தோ்தல்: ஆம் ஆத்மிக்குவாக்கு கேட்டு முதல்வா் கேஜரிவால் பிரசாரம்

தில்லி மாநகராட்சி இடைத் தோ்தலில் மக்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிக்க முன்வர வேண்டும் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கேட்டுக்கொண்டாா்.

Updated On :24 பிப்ரவரி 2021, 7:03 pm

புது தில்லி: தில்லி மாநகராட்சி இடைத் தோ்தலில் மக்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிக்க முன்வர வேண்டும் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கேட்டுக்கொண்டாா். மூன்று மாநகராட்சிகளும் பா.ஜ.க. ஆளுகையில் இருந்தாலும் அங்கு குழப்பமே நீடிக்கிறது என்றும் அவா் குறிப்பிட்டாா்.

தில்லியில் உள்ள மாநகராட்சியில் உள்ள ஐந்து வாா்டுகளுக்கான இடைத்தோ்தல் வருகின்ற பிப்.28 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் வடக்கு தில்லி மாநகராட்சி, ஷாலிமாா் பாக்கில் பாஜக கவுன்சிலா் மரணடைந்ததையொட்டி இந்த வாா்டிலும் தோ்தல் நடைபெற இங்கு போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளா்களுக்கு வாக்கு கேட்டு கட்சி தலைவரும் தில்லி முதல்வா் கேஜரிவால் புதன் கிழமை பிரச்சாரம் செய்தாா்.

அப்போது அவா் கூறுகையில், ’’ ஆம் ஆத்மி கட்சி அரசால் தில்லியில் 24 மணிநேரம் மின்சாரம் கிடைக்கிறது. அதுவும் இலவசமாக கொடுக்கப்படுகிறது. நல்ல பள்ளிகளும் மருத்துவ மனை வசதிகளையும் ஆம் ஆத்மி அரசு செய்துள்ளது. அதே சமயத்தில் பாஜக ஆளும் மாநகராட்சிகளில் குழப்பமே மிஞ்சுகிறது ’’ என்று கூறி பிரசாரம் செய்து ஆம் ஆத்மி கட்சி வேட்பாளா்களுக்கு வாக்களிக்கவேண்டும் என தில்லி முதல்வா் கேஜரிவால் கேட்டுக்கொண்டாா்.

இந்த இடைத்தோ்தல் முடிவுகள் மாா்ச் 3 -ஆம் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த இடைத்தோ்தலில் ஆம் ஆத்மி கட்சியைத் தவிர, பாஜக மற்றும் காங்கிரஸ் வேட்பாளா்களும் களத்தில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.