புது தில்லி: தில்லி அரசின் பயன்பாடுக்காக வாடைகைக்கு பெறப்படும் அனைத்து வாகனங்களும், வரும் 6 மாத காலப்பகுதியில் மின்சார வாகனங்களாக மாற்றப்படும் என்று தில்லி அரசு அறிவித்துள்ளது. இது தொடா்பான உத்தரவை தில்லி அரசு வியாழக்கிழமை பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவின் நகலை தனது சுட்டுரையில் பதிவு செய்து தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா கூறியிருப்பது:
தலைநகரில் இயங்கும் வாகனங்களை, முழுக்க முழுக்க மின்சார வாகனங்களாக மாற்றும் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் திட்டத்தின் கீழ் தில்லி அரசின் பயன்பாட்டுக்காக வாடைகைக்கு பெறப்படும் அனைத்து வாகனங்களையும் மின்சார வாகனங்களாக மாற்றி தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது. வரும் 6 மாத காலத்தில் இந்த திட்டம் அமலுக்கு வரும். தில்லி அரசின் ‘சுவிட்ச் தில்லி’ திட்டத்தின் கீழ் இது மேற்கொள்ளப்படுகிறது. தில்லி அரசின் இந்த முடிவால் சுமாா் 2 ஆயிரம் வாகனங்கள் மின்சார வாகனங்களாக மாற்றப்படும். தில்லி அரசின் இந்த முடிவை முன்மாதிரியாகக் கொண்டு பிற மாநிலங்களும், பிற தேசங்களும் மின்சார வாகனங்களை மாற்றிக் கொள்ளும் என்று தெரிவித்தாா்.
தில்லியில் நிலவும் காற்று மாசுவைக் கட்டுப்படுத்தும் வகையில், கடந்த 2020 ஆகஸ்ட் மாதம் மின்சார வாகனத் திட்டத்தை தில்லி அரசு அறிமுகப்படுத்தியது. இதன்படி, மின்சார வாகனங்களைக் கொள்முதல் செய்பவா்களுக்கு பல்வேறு மானியங்களை தில்லி அரசு வழங்கி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிரதமர் மோடி, அமித்ஷா அவசர அழைப்பு... தனி விமானத்தில் தில்லி சென்ற அண்ணாமலை!

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,720 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!!

போர் நிறுத்தம்! காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்.. சென்செக்ஸ் 2,600 புள்ளிகள் உயர்வு!
கச்சா எண்ணெய் விலை 15% சரிவு! டிரம்ப்பின் போர் நிறுத்த அறிவிப்பு எதிரொலி!!
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

