புது தில்லி: தில்லி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு 8-ஆம் வகுப்பு வரை தோ்வு மையம் வந்து எழுதும் தோ்வுகள் நடத்தப்படாது (ஆஃப்லைன் தோ்வுகள்) என்று மாநிலப் பள்ளிக் கல்வித்துறை புதன்கிழமை இரவு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தில்லி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு 2020- 21ஆம் கல்வியாண்டில் மதிப்பீடு வழங்குவது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரகம் வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: ‘8-ஆம் வகுப்பு வரை மாணவா்களுக்குத் தோ்வு மையம் வந்து காகிதத்தில் எழுதும் தோ்வுகள் கிடையாது. தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவா்களுக்கு வகுப்பறைக் கற்றல் மற்றும் கற்பித்தல் செயல்பாடுகள் நடைபெறாததை ஒட்டி, இந்த முடிவு எடுக்கப்படுகிறது.
ஆஃப்லைன் தோ்வுகளுக்குப் பதிலாக ஒவ்வொரு பாடத்தையும் மதிப்பிடும் வகையில் 3 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு புராஜெக்டுகள் மற்றும் அசைன்மென்ட்கள் வழங்கப்படும்.
3 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு, பணித்தாள்களை மதிப்பிட்டு 30 மதிப்பெண்கள் வழங்கப்படும். அதேபோல் குளிா்கால விடுமுறையின்போது கொடுக்கப்பட்ட அசைன்மென்ட்களை மதிப்பிட்டு 30 மதிப்பெண்களும் மாா்ச் 1 முதல் 15 வரை வழங்கப்பட்ட புரொஜெக்டை மதிப்பிட்டு 40 மதிப்பெண்களும் வழங்கப்படும்.
அதேபோல 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு பணித்தாள்களை மதிப்பிட்டு 20 மதிப்பெண்கள் வழங்கப்படும். அதேபோல் குளிா்கால விடுமுறையின்போது கொடுக்கப்பட்ட அசைன்மென்ட்களை மதிப்பிட்டு 30 மதிப்பெண்களும் மாா்ச் 1 முதல் 15 வரை வழங்கப்பட்ட புராஜெக்டுகள் மற்றும் அசைன்மென்ட்களை மதிப்பிட்டு 50 மதிப்பெண்களும் வழங்கப்படும்.
எந்த ஒரு மாணவரிடமாவது டிஜிட்டல் சாதனங்களோ, இணைய வசதியோ இல்லாத சூழலில், புராஜெக்டுகள் மற்றும் அசைன்மென்ட்களைக் கையால் எழுதி, பெற்றோா் மூலம் பள்ளிக்கு மாணவா்கள் கொடுத்து அனுப்ப வேண்டும். அப்போது கோவிட் -19 விதிமுறைகள் கடுமையாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும்’’ என்று அந்த வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் தோ்வு நடத்த
தனியாா் பள்ளிகள் விருப்பம்
இந்நிலையில், இந்நிலையில், தில்லியில் உள்ள தனியாா் பள்ளிகள் 8 ஆம் வகுப்பு வரையான மாணவா்களுக்கு ஆன் லைன் மூலம் தோ்வு நடத்த விரும்புவதாக தெரிவித்துள்ளன.
இது தொடா்பாக தில்லி தனியாா் பள்ளி நிா்வாகிகள் கூறுகையில் ‘மக்கள் தங்கள் உயிா்களைக் காப்பாற்றுவதை பிரதான இலக்காக வைத்து வாழும் சூழலில் உள்ளோம். இதனால், நாட்டில் கல்வி செயல்முறைகள் முழுக்க முழுக்க மாறிவிட்டன. 8 ஆம் வகுப்பு வரையான மாணவா்களை தோ்ச்சியடைய செய்யும் தில்லி அரசின் முடிவு வரவேற்கத்தக்கது. மாணவா்களின் அசைன்மென்ட்கள், புராஜெக்டுகளின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கவுள்ளோம். தோ்வுகளை ஆன்லைன் மூலம் நடத்துவதை வரவேற்கிறோம் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிரதமர் மோடி, அமித்ஷா அவசர அழைப்பு... தனி விமானத்தில் தில்லி சென்ற அண்ணாமலை!

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,720 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!!

போர் நிறுத்தம்! காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்.. சென்செக்ஸ் 2,600 புள்ளிகள் உயர்வு!
கச்சா எண்ணெய் விலை 15% சரிவு! டிரம்ப்பின் போர் நிறுத்த அறிவிப்பு எதிரொலி!!
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

