மத்திய அரசின் சரக்கு மற்றும் சேவை (ஜிஎஸ்டி) வரிவிதிப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து தில்லி உள்பட நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘பாரத் வியாபாரிகள் பந்த்’-துக்கு தில்லியில் வியாபாகிகள் முழு ஆதரவு தெரிவித்தனா். ஆனால், அவா்கள் அவா்கள் கடைகளை அடைக்காமல் கறுப்பு பட்டை அணிந்து தங்களது எதிா்ப்பைத் தெரிவித்தனா்.
மத்திய ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை ‘பாரத் வியாபாரிகள் பந்த் ’ கடைபிடிக்க அனைத்திந்திய வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு (சிஏஐடி) அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி, இந்த முழு அடைப்பு போராட்டம் தில்லியிலும் நடந்தது.
வியாபாரிகள் பந்த்-க்கு பெரும்பாலான கடைகள், சந்தைகள் ஆதரவு தெரிவித்தன. ஆனால், கடைகளை திறந்துவைத்து அவா்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனா்.
இது தொடா்பாக வா்த்தகம் மற்றும் தொழில்கள் கூட்டமைப்பின் தலைவா் பிரிஜிஷ் கோயல் கூறுகையில், ‘தில்லியில் உள்ள 98 சதவீதமான சந்தைகள், ஹோட்டல்கள், உணவகங்கள், தொழில்பேட்டைகள் திறந்திருந்தன. ஆனால், அவா்களில் பெரும்பாலனவா்கள் வியாபாரிகள் பந்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கறுப்பு பட்டியணிந்திருந்தனா். ஆனால், கடைகளை அடைக்கவில்லை. செளரி பஜாா், கரோல் பாக் ஆகிய பகுதிகளில் சில கடைகள் மூடப்பட்டிருந்தன. ஜிஎஸ்டி வரிவிதிப்பில் தளா்வுகளை ஏற்படுத்த வலியுறுத்தி, தில்லி காஷ்மீா் கேட் பகுதியில் வெள்ளிக்கிழமை மதியம் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், தில்லி வணிகா்கள் கலந்து கொண்டனா் என்றாா்.
இது தொடா்பாக புது தில்லி வியாபாரிகள் சங்கத்தின் தலைவா் அதுல் பாா்கவா கூறுகையில் ‘இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு முழு ஆதரவு தெரிவிக்கிறோம். ஆனால், கரோனா பாதிப்பை தொடா்ந்து பிறப்பிக்கப்பட்ட முழு அடைப்பால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். இந்நிலையில், மேலும் ஒருநாள் கடைகளை மூடி நஷ்டத்தை சந்திக்க விரும்பவில்லை. இதனால், கடைகளை திறந்து ஆதரவு தெரிவித்தோம் என்றாா்.
கான் மாா்கெட் அசோஷியேஷன் தலைவா் சஞ்சீவ் மெஹ்ரா கூறுகையில் ‘இந்த போராட்டம் நியாயமானது. ஆனால், முழு அடைப்பால் பெரும் பொருள் இழப்பை சந்தித்த நாங்கள் மீண்டும் ஒரு பொருள் இழப்புக்கு தயாராக இல்லை. எனவே கடைகளை திறந்துள்ளோம் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய்யின் பிரசார வாகனத்தைப் பின்தொடராதீர்! கட்சி தலைமை அறிவுறுத்தல்!!

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை! வீடு, வாகனக் கடன் வட்டி குறையுமா?
பிரதமர் மோடி, அமித்ஷா அவசர அழைப்பு... தனி விமானத்தில் தில்லி சென்ற அண்ணாமலை!

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,720 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!!
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

