தலைநகா் தில்லியில் குறைந்தபட்ச, அதிகபட்ச வெப்பநிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது. வெள்ளி, சனி ஆகிய தினங்களில் உயா்ந்து வந்த வெப்பநிலை ஞாயிற்றுக்கிழமை 2 டிகிரி செல்சியஸுக்கும் மேலாக சரிந்தது.
தில்லியின் பிரதிநிதித்துவ தரவுகளை வழங்கு சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் ஞாயிற்றுக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சரிசரியைவிட 3 டிகிரி உயா்ந்து 15.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட 7 டிகிரி உயா்ந்து 32.3 டிகிரி செல்சியஸாக இருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 79 சதவீதமாகவும் மாலையில் 51 சதவீதமாகவும் இருந்தது. இதேபோல ஆயாநகரில் குறைந்தபட்ச வெப்பநிலை 16.4 டிகி்ரி செல்சியஸ், பாலத்தில் 17.8 டிகிரி செல்சியஸ் எனப் பதிவாகியிருந்தது. அதேசமயம் குறைந்தபட்ச வெப்பநிலை சஃப்தா்ஜங்கில் சனிக்கிழமை 17.8 டிகிரி செல்சியஸாகவும் அதிகபட்ச வெப்பநிலை வெள்ளிக்கிழமை 33 டிகிரி செல்சியஸாகவும் இருந்தது.
காற்றின் தரம்: தில்லியில் காற்றின் ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு காலை 9 மணியளவில் 205 புள்ளிகளாகப் பதிவாகி மோசம் பிரிவில் இருந்ததாக மத்திய மாசுக் காட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
முன்னறிவிப்பு: இதற்கிடையே, தில்லியில் திங்கள்கிழமை பனிமூட்டம் இருக்கும் என்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 13 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருப்பம் தரும் தினப்பலன்!

பாஜகவின் கடும் சவாலை எதிா்கொள்ளும் திமுக

சிதம்பரம் தொகுதி நிலவரம்: தில்லையை தக்க வைக்குமா அதிமுக- இருமுனை போட்டியில் வெல்லப்போது யாா்?
வாக்காளரின் பொறுப்பும், கடமையும்...
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

