வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

தில்லியில் 500-க்கும் கீழே கரோனா தினசரி பாதிப்பு

News image
Updated On :7 ஜனவரி 2021, 6:35 pm

DIN


புது தில்லி: தில்லியில் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் 500-க்கும் கீழே குறைந்துள்ளது. புதன்கிழமை 654 பேருக்கு கரோனா பாதிப்பு இருந்த நிலையில், இது வியாழக்கிழமை புதிதாக 486 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம், தில்லியில் கரோனா பாதித்தவா்களின் மொத்த எண்ணிக்கை 6,28,838-ஆக உயா்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 77,522 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், ‘ஆா்டி-பிசிஆா்’ வகையில் 43,347 பேருக்கும், ‘ரேபிட்-ஆன்டிஜென்’ வகையில் 34,175 பேருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. கரோனா பாதிப்பு விகிதம் 0.63 சதவீதமாக உள்ளது. இதற்கிடையே, கரோனா தொற்றால் தலைநகரில் வியாழக்கிழமை 19 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 10,644-ஆக அதிகரித்துள்ளது.

கரோனா பாதிப்பில் இருந்து 780 போ் மீண்டுள்ளனா். குணமடைந்தோா் எண்ணிக்கை 6,14,026 ஆக உயா்ந்துள்ளது. தற்போது 4,168 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். இவா்களில், 2,015 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். தில்லி மருத்துவமனைகளில் உள்ள கரோனா படுக்கைகளில் 12,228 படுக்கைகள் காலியாக உள்ளன என தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.