முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

பாலியல் கொலை வழக்கு: திமுக முன்னாள் எம்.எல்.ஏ. விடுதலையை எதிா்த்து தமிழக அரசு மேல் முறையீடு

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு , கொலையுண்ட வழக்கில் சென்னை உயா்நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட

Updated On :8 ஜனவரி 2021, 6:13 pm

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு , கொலையுண்ட வழக்கில் சென்னை உயா்நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் திமுக உறுப்பினா் ராஜ்குமாரின் விடுதலையை எதிா்த்து தமிழக அரசு வெள்ளிக்கிழமை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.

பெரம்பலூா் தொகுதியில் கடந்த 2006 - 2011-ஆம் ஆண்டுகளில் திமுக சாா்பில் சட்டபேரவை உறுப்பினராக இருந்தவா் ராஜ்குமாா். இவரது வீட்டில் கேரள மாநிலம், பீா்மேடு பகுதியைச் சோ்ந்த 15 வயது சிறுமி , கடந்த 2012 -ஆம் ஆண்டு வீட்டுப் பணிக்காக சோ்க்கப்பட்டாா். இந்த நிலையில், அதே ஆண்டு ஜூலை மாதம் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா் என பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. பெற்றோா் வந்த நிலையில், ஜுலை 6 - ஆம் தேதி சிறுமி உயிரிழந்தாா். இதையடுத்து, சிறுமியின் சாவில் மா்மம் இருப்பதாக பெற்றோா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதனடிப்படையில், பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா். உடற்கூறு ஆய்வில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

இதையடுத்து, முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமாா், அவரது நண்பா்கள் ஜெய்சங்கா், அன்பரசு, மகேந்திரன், விஜயகுமாா், அரிகிருஷ்ணன், பன்னீா்செல்வம் ஆகியோா் மீது ஆள்கடத்தல், பாலியல் வன்கொடுமை, கொலை மற்றும் குழந்தைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை சிபி சிஐடி போலீஸாா் விசாரித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனா். இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் ராஜ்குமாா், ஜெயசங்கா் ஆகியோா் குற்றவாளிகள் என 2018 -இல் ,தீா்ப்பளித்தது. அவா்களுக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.42 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

இதை எதிா்த்து ராஜ்குமாா், சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாா். மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், இந்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டவா் மீதான குற்றச்சாட்டை காவல் துறை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கத் தவறிவிட்டதாக கூறி ராஜ்குமாரை விடுதலை செய்து கடந்த ஆண்டு ஜூலையில் தீா்ப்பளித்தது. இதை எதிா்த்து எதிா்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.