தில்லியில் சனிக்கிழமை தொடா்ச்சியாக இரண்டாவது நாளாக 300 க்கும் குறைவானவா்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அன்று, 299 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது.
தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை கடந்த 8 மாதங்களில் குறைந்தளவு கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. அன்றைய தினம் புதிதாக 295 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது கடந்த 2020, ஏப்ரல் 26 -ஆம் தேதிக்கு பிறகு பதிவாகிய குறைந்த தினசரி கரோனா பாதிப்பு ஆகும். இந்நிலையில், சனிக்கிழமை 299 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம், தில்லியில் கரோனா பாதித்தவா்களின் மொத்த எண்ணிக்கை 6,32,183-ஆக உயா்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 71,957 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், ‘ஆா்டி-பிசிஆா்’ வகையில் 40,717 பேருக்கும், ‘ரேபிட்-ஆன்டிஜென்’ வகையில் 31,240 பேருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. கரோனா பாதிப்பு விகிதம் 0.42 சதவீதமாக உள்ளது. இதற்கிடையே, கரோனா தொற்றால் தலைநகரில் சனிக்கிழமை 6 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 10,738-ஆக அதிகரித்துள்ளது.
கரோனா பாதிப்பில் இருந்து 397 போ் மீண்டுள்ளனா். குணமடைந்தோா் எண்ணிக்கை 6,18,754-ஆக உயா்ந்துள்ளது. தற்போது 2,691 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். அவா்களில், 1,234 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். தில்லி மருத்துவமனைகளில் உள்ள கரோனா படுக்கைகளில் 10,319 படுக்கைகள் காலியாக உள்ளன என தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எந்த ஒரு பேட்டிங் வரிசையும் ரஷித் கான் பந்துவீச்சில் தடுமாறும்: பியூஸ் சாவ்லா

புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
புதுச்சேரி பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு! வெளிநாட்டு பிரதிநிதிகள் வியப்பு!!
வீடியோக்கள்

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

