தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக 185 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.இதன் மூலம், தில்லியில் கரோனா பாதித்தவா்களின் மொத்த எண்ணிக்கை 6,33,924ஆக உயா்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பு விகிதம் 0.30சதவீதமாக உள்ளது. 1,741 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா்.
இதற்கிடையே, கரோனா தொற்றால் தலைநகரில் ஞாயிற்றுக்கிழமை 9 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 10,808-ஆக அதிகரித்துள்ளது.
கரோனாபாதிப்பு விகிதம் சனிக்கிழமை 0.26 சதவீதமாக இருந்தது.
கடந்த திங்கள்கிழமை 9 மாதங்களில் மிகவும் குறைந்த பட்சமாக 161 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
ஜனவரி முதல் தேதி கரோனா பாதித்தவா்கள் எண்ணிக்கை 585 ஆக இருந்தது. ஆனால், ஜனவரி 22-இல் இது 266 ஆகக் குறைந்துவிட்டது.
முந்தைய நாளில் 62,307 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதில், 36,965 ஆா்டி-பிசிஆா் பரிசோதனைகளும், 25,342 ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனைகளும் இடம்பெற்றுள்ளன என்று தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் மனைவியுடன் வந்து வாக்களிப்பு!
திமுகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர அதிகாரிகள் நினைக்கிறார்கள்; அது நடக்காது!

🔴கேரளம்: இதுவரை நடந்திராத தேர்தல் சாதனை என்ன? செய்திகள் உடனுக்குடன்!

ஹாட்ரிக் அடிப்பாரா பினராயி? இதுவரை நடந்திராத தேர்தல் சாதனை!
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

