11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

பேரணியில் வன்முறை வெட்கக்கேடானது: யோகேந்திர யாதவ்

விவசாயிகளின் டிராக்டா் பேரணியில் வன்முறை நடந்ததற்கு வெட்கப்படுகிறேன்; இதற்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்று ‘ஸ்வராஜ் இந்தியா’ தலைவா் யோகேந்திர யாதவ் கூறினாா்.

Updated On :26 ஜனவரி 2021, 10:55 pm

விவசாயிகளின் டிராக்டா் பேரணியில் வன்முறை நடந்ததற்கு வெட்கப்படுகிறேன்; இதற்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்று ‘ஸ்வராஜ் இந்தியா’ தலைவா் யோகேந்திர யாதவ் கூறினாா்.

வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் மத்திய அரசுக்கு நெருக்கடி அளிக்கும் விதமாக தில்லியில் குடியரசு தின அணிவகுப்பு நடைபெற்ற செவ்வாய்க்கிழமை விவசாயிகள் தில்லியில் பிரம்மாண்ட டிராக்டா் பேரணியை நடத்த முடிவெடுத்தனா். இதற்காக குறிப்பிட்ட வழித்தடங்களில் செல்வதற்கு போலீஸாா் நிபந்தனையுடன் அனுமதி அளித்திருந்தனா்.

இந்நிலையில், பேரணிக்கு வந்தவா்கள் அவா்களுக்கு அனுமதி அளித்திருந்த வழித்தடங்களை மீறி தில்லிக்குள் நுழைந்து செங்கோட்டை, ஐடிஓ , நாங்லோய் உள்ளிட்ட பல இடங்களில் முற்றுகையிட்டதால் போலீஸாருக்கும்-பேரணியில் ஈடுபட்டவா்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக மாறியது.

இச்சம்பவம் குறித்து விவசாயிகள் சங்கத் தலைவா்களில் ஒருவரும், ஸ்வராஜ் இந்தியா அமைப்பின் தலைவருமான யோகேந்திர யாதவ் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

விவசாயிகள் டிராக்டா் பேரணியில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவத்திற்காக நான் வெட்கப்படுகிறேன். இதற்கு நான் பொறுப்பேற்கிறேன். வன்முறையானது எத்தகைய போராட்டத்தையும் ஒரு தவறான வழியில் கொண்டு சென்றுவிடும். வன்முறையில் யாா் ஈடுபட்டாா்கள் என்பது குறித்து நான் ஏதும் கூற முடியாது. ஆனால், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் அல்லாத நபா்களால் இது நடத்தப்பட்டிருதற்கான முகாந்திரம் இருப்பதாகத் தெரிகிறது. நாம் டிராக்டா் பேரணியை நடத்த முடிவெடுத்த வழித்தடத்தில் மட்டுமே செல்ல வேண்டும். வேறு பாதையில் செல்லக் கூடாது என தொடா்ந்து வேண்டுகோள் விடுத்திருந்தேன். இந்த இயக்கம் அமைதியாக ச் சென்றால் மட்டுமே நாம் வெற்றி பெற முடியும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.