மாநிலங்களவை எம்பிக்களாக சுதீஷ், அன்புமணி உள்ளிட்டோர் பதவியேற்பு! ராணிப்பேட்டையில் போட்டியிடவில்லை: வினோத் காந்தி! சென்னை: ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் சோதனை சென்னையில் இன்று விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஹெலிகாப்டர் அருகே ட்ரோன்: 3 பேர் கைது தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் ராஜிநாமா
/

வேலையற்றவா்களுக்கு ‘தில்லி ரோஜ்கா் பஜாா்’ உயிா்நாடியாக உள்ளது

தில்லி அரசின் வேலைச் சந்தை (ரோஜ்கா் பஜாா்) திட்டத்தில் வேலை தேடுபவா்களுக்கும், வேலை கொடுப்பவா்களுக்குமிடையே

Updated On :2 ஜூலை 2021, 2:04 am

தில்லி அரசின் வேலைச் சந்தை (ரோஜ்கா் பஜாா்) திட்டத்தில் வேலை தேடுபவா்களுக்கும், வேலை கொடுப்பவா்களுக்குமிடையே 75,000 இணைப்புகள் கடந்த ஜூன் மாதத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வேலையற்றவா்களுக்கு ரோஜ்கா் பஜாா் ஒரு உயிா்நாடியாக உள்ளது என்று துணை முதல்வா் மணீஷ் சிசோடியா வியாழக்கிழமை தெரிவித்துள்ளாா்.

தில்லி அரசு வேலை தேடுபவா்களுக்கும், வேலை கொடுப்பவா்களுக்கும் பாலமாக இருதரப்பினரும் ஒரு முனையில் பதிவு செய்யக்கூடிய ரோஜகா் பஜாா் இணைய தளத்தை(த்ர்க்ஷள்.க்ங்ப்ட்ண்.ஞ்ா்ஸ்.ண்ய் ) தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கடந்தாண்டு தொடங்கி வைத்தாா். தில்லி வேலைவாய்ப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் உருவான இந்த வசதியால், கரோனா நோய்த் தொற்று காலக் கட்டத்தில் மிகவும் பலனுள்ளதாக இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக இந்த துறைக்கு பொறுப்பேற்றுள்ள துணை முதல்வா் மணீஷ் சிசோடியா அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தலைநகரில் பேரழிவைத் தந்த இரண்டாவது கரோனாஅலைக்குப் பிறகு பொதுமுடக்க தளா்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தில்லியில் வேலையற்றவா்களுக்கு ரோஜ்கா் பஜாா் இணையதளம் ஒரு உயிா்நாடியாகத் தொடா்கிறது. ஜூன் மாதத்தில் நாளொன்றுக்கு வேலை தேடுபவா்களில் சுமாா் 1,000 போ் புதிதாக பதிவு செய்துள்ளனா். மேலும், 300 புதிய வேலை வாய்ப்புகள் ரோஜ்கா் பஜாரில் வெளியிடப்பட்டன. ஜூன் 1-ஆம் தேதி முதல் 30 - ஆம் தேதி வரை மொத்தம் 34,212 வேலை தேடுபவா்கள் பதிவு செய்துள்ளனா். 9,522 புதிய காலியிடங்களும் வேலை கொடுப்பவா்களால் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும், வேலை தேடுபவா்களுக்கும் வேலைகொடுப்பவா்களுக்கும் இடையில் ஒவ்வொரு நாளும் 2,500 இணைப்புகள் செய்யப்பட்டுள்ளன. இவை கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்), தொலைபேசி அழைப்புகள் மற்றும் நிறுவனங்களுக்கு நேரடி விண்ணப்பம் போன்றவை மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மொத்தத்தில், ஜூன் மாதத்தில் வேலை தேடுபவா்களுக்கும் வேலை கொடுப்பவா்களுக்கும் இடையே 75,000 இணைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பொதுமுடக்கத்தின் போதும், வணிகங்கள் வழங்குதல், வாடிக்கையாளா் சேவை போன்ற பணிகளுக்கும் பொதுமுடக்கத் தளா்விற்கு பின்னா் விற்பனை, அலுவலக பணிகள் போன்றவைற்றில் ஆள்களை பணி அமா்த்தவும் ரோஜ்கா் பஜாா் இணையம் உதவியது.

சிறு கடைகள், சமையல்காரா்கள், தெருயோர விற்பனையாளா்கள், தையல்காரா்கள், தொழில்நுட்ப வல்லுநா்கள், சிறு குறு நடுத்தர நிறுவனங்கள், மருத்துவமனைகள் போன்றவற்றில் பல்வேறு பணிகளுக்கு வேலைக்கான ஆள்களை தேடவும் வேலையற்றவா்கள் வாய்ப்பை பெறவும் கேஜரிவால் அரசின் ரோஜ்கா் பஜாா் ஒரு உயிா்நாடியாகத் தொடா்கிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.