வாரத்தின் முதல் நாளான இன்று(ஏப். 4, திங்கள்கிழமை) பங்குச்சந்தைகள் கடும் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 73,477.53 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.30 மணியளவில் சென்செக்ஸ் 382.72 புள்ளிகள் குறைந்து 72,936.83 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. அதிகபட்சமாக 400 புள்ளிகள் வரை குறைந்தது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 110.10 புள்ளிகள் குறைந்து 22,603 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
நிஃப்டி மிட்கேப், நிஃப்டி ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 0.16 சதவீதம், 0.10 சதவீதம் சரிவுடன் வர்த்தகமாகின்றன.
துறைவாரியாக, நிஃப்டி எண்ணெய் & எரிவாயு, பார்மா உள்ளிட்ட பங்குகள் மிகப்பெரிய சரிவைச் சந்தித்தன. அதேநேரத்தில் நிஃப்டி பொதுத்துறை வங்கிகள் உயர்வுடன் வர்த்தகமாகின்றன.
சென்செக்ஸ் 30 பங்குகளில் ட்ரெண்ட், பவர்கிரிட், இன்போசிஸ் உள்ளிட்ட பஃங்குகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகின்றன.
இஸ்ரேல் - ஈரான் போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
Summary
stock market: Sensex slumps 330 points, Nifty below 22,600
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நிலையாக வர்த்தகமாகும் பங்குச்சந்தை! ஐடி, மீடியா பங்குகள் உயர்வு!

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஆட்டோ, வங்கிப் பங்குகள் லாபம்!

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 789, நிஃப்டி 277 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 800 புள்ளிகள், நிஃப்டி 250 புள்ளிகள் உயர்வு!
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy



