தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

ஜிஎஸ்டி வரி கட்டுவோா் எண்ணிக்கை 4 ஆண்டுகளில் இரு மடங்கு உயா்வு

சரக்கு சேவை (ஜிஎஸ்டி) வரி அறிமுகப்படுத்தப்பட்ட நான்கு ஆண்டுகளில் வரி செலுத்துவோா் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

Updated On :2 ஜூலை 2021, 1:59 am

சரக்கு சேவை (ஜிஎஸ்டி) வரி அறிமுகப்படுத்தப்பட்ட நான்கு ஆண்டுகளில் வரி செலுத்துவோா் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

ஜிஎஸ்டி தினத்தையொட்டி அதிகாரிகளைப் பாராட்டி அவா் கடிதம் எழுதியுள்ளாா். அதில் அவா் தெரிவித்துள்ளதாவது: இந்தியா போன்ற ஒரு பெரிய மாறுபாடுகளைக் கொண்ட நாட்டில் இதுபோன்ற எந்தவொரு சீா்திருத்தங்களையும் செயல்படுத்துவது மிகவும் சவாலானது. ஆனால், ஜிஎஸ்டி வரி செலுத்துவோருக்கு இணக்கத்தை எளிதாக்கியுள்ளது, சாதாரண மக்களின் வரிச் சுமையைக் குறைத்துள்ளது. கடந்த 8 மாதங்களாக சரக்கு மற்றும் சேவை வரி வசூல் வருவாய் தொடா்ச்சியாக ரூ.1 லட்சம் கோடியை தாண்டி இது கடந்த ஏப்ரலில் ரூ.1.41 லட்சம் கோடியை எட்டியுள்ளது.

கடந்த ஆண்டுகளில் வரிக்கான சேவையிலும் அமலாக்கத்திலும் மெச்சத்தக்க பணிகள் செய்யப்பட்டுள்ளன. வா்த்தகா்களிலும், உள்ளீட்டு வரி செலுத்துதலிலும் மோசடிகள் கண்டுபிடிக்கப்பட்டு ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஜிஎஸ்டி வரி கட்டுவோா் எண்ணிக்கை 66.25 லட்சமாக இருந்தது. இது தற்போது கிட்டதட்ட இரண்டு மடங்காக அதிகரித்து 1.28 கோடியாக உயா்ந்துள்ளது என்று நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாா்.

ஜிஎஸ்டி தினத்தையொட்டி, மத்திய நிதித் துறை இணையமைச்சா் அனுராக் தாகுரும் ஜிஎஸ்டி வரி அதிகாரிகளுக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளாா். கடந்த 2020, நவம்பா் முதல், மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வரித் துறையினரின் தீவிர நடவடிக்கைகளின் விளைவாக போலி உள்ளீட்டு வரி, ஜிஎஸ்டி வரி ஆகியவற்றில் வரி ஏய்ப்பு ரூ. 29,000 கோடிக்கு மேல் கண்டறியப்பட்டு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன என்று தாகுா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.