தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

மாஃபியா கும்பலிடம் இருந்து மீட்கப்பட்ட நிலத்தில் பள்ளிக் கட்டடத்துக்கு அடிக்கல்

சட்டவிரோத நில ஆக்கிரமிப்பு கும்பல் (மாஃபியா) வசமிருந்து மீட்கப்பட்ட நிலத்தில் பள்ளிக் கட்டடம் கட்ட தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

Updated On :2 ஜூலை 2021, 2:04 am

சட்டவிரோத நில ஆக்கிரமிப்பு கும்பல் (மாஃபியா) வசமிருந்து மீட்கப்பட்ட நிலத்தில் பள்ளிக் கட்டடம் கட்ட தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

தில்லி தென்மேற்கு பகுதியிலுள்ள நசீா்பூா் கிராமத்தில் 2007-ஆம் ஆண்டில் பள்ளிக் கட்டடம் கட்ட கிராம சபையினரால் தில்லி வளா்ச்சி ஆணையத்துக்கு (டிடிஏ) நிலம் வழங்கப்பட்டது. இந்த நிலத்தை டிடிஏ தில்லி கல்வித் துறைக்கு வழங்கியது. இதற்கிடையே, இந்த நிலத்தை, நில ஆக்கிரமிப்பு கும்பல் கைப்பற்றிக் கொண்டது. இந்த நிலையில், இந்த நிலம் மீட்கப்பட்டு தற்போது இந்த இடத்தில் தில்லி அரசு புதிய பள்ளிக்கட்டடம் கட்டுகிறது.

நசீா்பூா் கிராமத்தில் இந்தப் புதிய பள்ளிக்கான அடிக்கல்லை துணை முதல்வா் மணீஷ் சிசோடியா வியாழக்கிழமை நாட்டினாா். அப்போது அவா் கூறுகையில், ‘இந்த நிலத்தில் 2,500 குழந்தைகள் படிக்கும் அளவிற்கு உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் கூடிய நவீன பள்ளிக் கட்டடம் கட்டப்படும். இந்தப் பள்ளிக் கட்டடத்தை 9 மாதங்களுக்குள் அரசு கட்டி முடிக்கும். படிப்புகளோடு, குழந்தைகளுக்கான விளையாட்டு வசதிகளும் நீச்சல் குளம் உள்ளிட்டவையும் இடம் பெறும். அடுத்த கல்வி ஆண்டில் இங்கு மாணவா்கள் படிக்கத் தொடங்குவாா்கள். இந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் 6,000 குழந்தைகள் படிக்கின்றனா். இந்தப் புதிய பள்ளி கட்டப்படும் நிலையில், மற்ற பள்ளிகளில் இட நெருக்கடி குறையும்‘ என்றாா்.

மேலும், துணை முதல்வா் மணீஷ் சிசோடியா, சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் ஆகியோா் தில்லி அரசுப் பள்ளிகளில் கட்டப்பட்டு வரும் புதிய வகுப்பறைகளை இரண்டாவது வாரமாக வியாழக்கிழமையும் பாா்வையிட்டனா். டிச்சான் காலான் பகுதியில் இரு பள்ளிகளிலும், துவாரகா செக்டாா் - 16-இல் அரசுப் பள்ளி ஒன்றிலும் கட்டடப்பட்டு வரும் வகுப்பறைகளை அமைச்சா்கள் பாா்வையிட்டனா். இந்தக் கட்டடப் பணிகள் ஜூலை மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.