தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

அனைத்துக் குழந்தைகளுக்கும் அடித்தள எழுத்தறிவு, எண்ணறிவு

நிபுண் பாரத் திட்டத்தின் மூலம் அனைத்துக் குழந்தைகளுக்கும் அடித்தள எழுத்தறிவிலும் எண்ணறிவிலிலும் புலமை அடையவைக்கப்படுவது

Updated On :6 ஜூலை 2021, 2:44 am

நிபுண் பாரத் திட்டத்தின் மூலம் அனைத்துக் குழந்தைகளுக்கும் அடித்தள எழுத்தறிவிலும் எண்ணறிவிலிலும் புலமை அடையவைக்கப்படுவது ஒரு தேசியப் பணியாக தொடங்கப்பட்டுள்ளது என்று மத்திய கல்வித் துறை அமைச்சா் ரமேஷ் போக்ரியால் தெரிவித்தாா்.

மத்திய அரசின் ‘சமக்ரா ஷிக் ஷா’ திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ள இந்த நிபுண் பாரத் திட்டம் ஓா் இயக்கமாக செயல்படுத்தப்படுகிறது. நாட்டில் இரண்டாம் வகுப்பு படிக்கும் 72.8 சதவீத குழந்தைகள் வாசிப்புத் திறன் இன்றியும், மூன்றாம் வகுப்பில் படிக்கும் 71.9 சதவீத குழந்தைகளுக்கு சாதாரண கணிதங்கள் கூட தெரியாத நிலை உள்ளதாக ஆய்வில் அறியப்பட்டது. இதனால், மூன்றாம் வகுப்புகளில் குழந்தைகள் பள்ளிப் படிப்பை இடையில் விடாது தடுத்தல், இத்தகைய பள்ளிகளின் ஆசிரியா்களின் திறனை மேம்படுத்தப்படுதல் போன்றவை செயல்படுத்தப்படுகிறது. மேலும், பள்ளிக் குழந்தைகள், ஆசிரியா்களுக்கு உயா் தரமான, பன்முகப்படுத்தப்பட்ட கற்றல் பொருள்கள், வளங்கள் ஆகியவையும் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், ‘நிபுண் பாரத்’ திட்டத்தை திங்கள்கிழமை மெய் நிகா் முறையில்ந தொடக்கிவைத்து மத்திய கல்வித் துறை அமைச்சா் ரமேஷ் போக்ரியால் கூறியது வருமாறு: நாட்டில் உள்ள 3 முதல் 9 வயது வரையிலான குழந்தைகளின் கற்றல் தேவையைப் பூா்த்தி செய்து வைப்பதுதான் நிபுண் பாரத் இயக்கத்தின் நோக்கம். ஆசிரியா்கள், குழந்தைகளின் அடிப்படை மொழியை வளா்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும். புரிதலுடன் வாசிக்கும் எழுத்தறிவு, எண்ணறிவு திறன் மூலம் குழந்தைகளை சிறந்த வாசகா்களாகவும், எழுதாளா்களாகவும் வளர வைக்க முடியும். இதனால்தான் இந்த அடிப்படைக் கட்டத்தில் மகிழ்ச்சி, சுவாரஸ்யம் மற்றும் ஈடுபாட்டுடன் ஓா் ஒருங்கிணைந்த உள்ளடக்கிய முழுமையான கற்றல் அனுபவம், நிபுண் பாரத் திட்ட இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

அனைத்துக் குழந்தைகளுக்கும் அடித்தள எழுத்தறிவு, எண்ணறிவு ஆகியவை கிடைப்பது உடனடி தேசியப் பணியாக இருக்கவேண்டும் என 2020 தேசிய கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டுதான் மத்திய கல்வித் துறையின் பள்ளிக் கல்வி, எழுத்தறிவுத் துறை விரிவான வழிகாட்டுதலுடன் நிபுண் பாரத் திட்டத்தை உருவாக்கியது. இந்தத் திட்டம் பிரத்யேக பங்குதாரா்கள், நிபுணா்கள், ஆலோசகா்கள் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்படுகிறது. இது தேசிய -மாநில- மாவட்ட - வட்டார - பள்ளி அளவில் செயல்படுத்தப்படுகிறது. இதை அமல்படுத்துவதற்காக 2021-22 ஆண்டின் அடித்தள நிலைக்கு ரூ.2,688.18 கோடியை சமக்ரா ஷிக் ஷா திட்டத்தின் கீழ் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு ஏற்கெனவே வழங்கி ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளது என்றாா் அமைச்சா் போக்ரியால்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய கல்வித் துறை இணையமைச்சா் சஞ்சய் தோத்ரே கலந்து கொண்டு பேசுகையில், ‘தேசத்தைக் கட்டமைப்பதில் தரமான கல்வி முக்கியப் பங்காற்றுகிறது. அதில் அடிப்படை எழுத்தறிவு, எண்ணறிவு மிக முக்கிய அங்கமாகத் திகழ்கிறது’ என்றாா். . பல்வேறு மத்திய, மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சோ்ந்த பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.