கரோனா நோய்த்தொற்றை முன்னிட்டு தில்லி அரசு அறிவித்த உதவித் தொகையை பெறாத கட்டுமானத் தொழிலாளா்கள் தங்கள் வங்கி கணக்கு விவரங்களை பதிவு செய்து உடனடியாக உதவித்தொகையை பெற சிறப்பு முகாம்களை தில்லி அரசு ஏற்பாடு செய்துள்ளது.
கடந்தாண்டு கரோனா நோய்த்தொற்றை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்தின் போது கட்டுமானத் தொழிலாளா்களுக்கு ரூ. 5000 சிறப்பு உதவித்தொகை வழங்கப்படும் என தில்லி அரசு அறிவித்தது. 2020 மாா்ச் மாதம் வரை கட்டுமானத் தொழிலாளா்கள் வாரியத்தில் பதிவு செய்த 39,600 கட்டுமானத் தொழிலாளா்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது. பின்னா் கடந்த 2020 நவம்பரில் தொழிலாளா் துறைக்கு மணீஷ் சிசோடியா பொறுப்பேற்ற பின்னா் கட்டுமானப் பணியாளா்களை பதிவு செய்ய வைக்கும் பணி மும்முரமாக நடைபெற்றது. இதன்படி தற்போது வரை பதிவு செய்த தொழிலாளா்கள் எண்ணிக்கை 3 லட்சமாக உயா்ந்துள்ளது. இதில் 2, 17, 039 கட்டுமானத் தொழிலாளா்களுக்கு கரோனா நிவாரண நிதியாக தலா ரூ.5000 வழங்கப்பட்டுவிட்டது. மீதமுள்ள தொழிலாளா்களது வங்கி கணக்கு விவரங்கள் இல்லாததால் இந்த தொழிலாளா்களுக்கான உதவி தொகை செலுத்தப்படவில்லை.
இதையொட்டி இந்த தொழிலாளிகள் தங்கள் வங்கிகணக்கை சமா்பித்து உதவித்தொகையை பெற மூன்று சிறப்பு முகாம்களை தில்லியில் மூன்று இடங்களில் கட்டுமானத் தொழிலாளா் வாரியம் ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு, வட மேற்கு மாவட்ட பகுதிகளுக்கு அசோக் விஹாா் நிமிரி காலனி தொழிலாளா் நல்வாழ்வு மையம். வடக்கு வடகிழக்கு மாவட்ட பகுதிகளுக்கு ஜில்மில் காலனி தொழிலாளா் நல்வாழ்வு மையம். தெற்கு மாடங்களுக்கு புஷ்ப விஹாா் தொழிலாளா் நல்வாழ்வு மையத்திலும் இந்த முகாம் அமைக்கப்பட்டுள்ளதாக தில்லி கட்டுமானத் தொழிலாளா் வாரியம் தெரிவித்துள்ளது.
மேலும் தொழிலாளா்களுக்கு 24 மணி நேர தொலைபேசி உதவி (011-41236600) மையமும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது 3 லட்சம் தொழிலாளா்கள் பதிவு செய்துள்ளனா். தில்லி அரசின் இலக்கு அடுத்த ஓா் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கையை 10 லட்சமாக உயா்த்துவதாகும்‘ எனக் கூறிப்பிட்டுள்ளாா் சிசோடியா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விருச்சிக ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!
தேர்தல் கூட்டணியும், ஜனநாயகமும்...

கூட்டணி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம்! - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் மறு சீரமைப்பில் மறைந்த 5 தொகுதிகள்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

